திருக்கழுக்குன்றம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரம் நகர இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவிற்கு மாமல்லபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன் குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் 350 பேருக்கு ஹெல்மெட் , 20 பேருக்கு தையல் மெஷின், கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு 100 பேருக்கு காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட பொருளாளர் வெ.விஸ்வநாதன், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி. கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பிரபு, கோல்டு பிரகாஷ், சேகர், ராஜன், கோதண்ட ராமன், சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.