Browsing: அரசியல்

முதல்வருக்கு ஜவாஹிருல்லா நன்றி – Dinakaran

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்துக்கு பதிலுரைத்துப் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடக்கத்திலேயே என்னுடைய கோரிக்கையை மேற்கோள் காட்டி, பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை பத்து கோடியாக உயர்த்தி தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாகவும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரத்தையடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும். கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் அடையாளம் மாணவிக்கு தெரியவில்லை என்றாலும், குற்றவாளிகள் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட பெயரை அடிப்படையாக வைத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் பகுதிகளில்…

 ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக தலைமை ஆதரவு: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் ஆகும். இதை செயல்படுத்தும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை ஒன்றிய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும்…

தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ள நிலையில் சச்சின் ைபலட் ‘சோலோ’ பிரசாரம்: ராஜஸ்தான் காங்கிரசில் மோதல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் சச்சின் பைலட் சோலோவாக பிரசாரத்தை தொடங்க உள்ளதால், ராஜஸ்தான் காங்கிரசில் மோதல் வலுத்து வருகிறது. கடந்த 2018ல் ராஜஸ்தானில் நடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்  பெற்றதும், அசோக் கெலாட் – சச்சின் பைலட் இருவரும் முதல்வர் பதவிக்கு உரிமை  கோரினர். ஆனால் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை  முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் இருவருக்கும் ஒத்து வராததால் சச்சின்  பைலட் தனது பதவியை…

மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு தைலாபுரத்தில் ஜன.18-ம் தேதி நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு தைலாபுரம் பயிலரங்கத்தில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியல், சமூக, மொழி, கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இதுவரை 34 அமைப்புகளை தொடங்கியிருக்கிறார். அந்த அமைப்புகள் அவை அவை சார்ந்த தளங்களில் பணியாற்றி வருகின்றன.  எந்தவொரு அமைப்பாக இருந்தாலும்…

நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல 3,150 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களின் மத நம்பிக்கையை தங்களது  சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்பவர்களுக்குத்தான் எதிரிகள். கடந்த 18 மாதத்தில் மட்டும் ரூ.3,657 கோடி மதிப்பிலான 3,150 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின்…

டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு சட்ட பேரவையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: 2021 டிசம்பர் 1ம் தேதி முதல் ஆட்சேர்ப்புக்காக, நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எந்தவொரு பணியிலும் எந்தவொரு பதவிக்கும், விண்ணப்பிக்கும் நபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை அவ்வப்போது அரசால் ஆணையிடப்பட வேண்டும்.…

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 41 பேர் பலியாகியும் மனமிரங்காத ஆளுநர்: அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கடந்த 2021ம் ஆண்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41வது தற்கொலை இதுவாகும். கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகமாகும். தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50…

எதிர்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் ராகுலின் நடைபயண நிறைவு விழா; சந்திரசேகர ராவின் மாநாடு: ஒரே குடையின் கீழ் பாஜகவை எதிர்க்கும் வியூகம் பயனளிக்குமா?

புதுடெல்லி: ராகுலின் நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போல், சந்திர சேகர ராவ் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டிற்கும் எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒரே குடையின் கீழ் பாஜகவை எதிர்க்கும் வியூகம் பயனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய…

அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், குட்காவும் தலைவிரித்தாடியது போதை பொருட்களை வேரோடு ஒழிப்பது தான் திமுக ஆட்சியின் இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: போதைப் பொருள் நடமாட்டம் முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததால் குறைந்திருந்தது. ஆனால் தற்போது 2,136  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் தான் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.  வேதாரண்யம் அருகே ரூ.360 கோடி மதிப்பிலான கோகைன் என்ற விலை உயர்ந்த போதை பொருள்…

1 36 37 38 39 40 161