Browsing: அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி?.. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடும் எடப்பாடி தரப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ல் தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால், இந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பாஜ தனித்து போட்டியிடும் வகையில், தேர்தல் பணிக்குழுவை அமைத்திருப்பதன் பின்னணியில் பல்வேறு  தகவல்கள் வெளியாகி உள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்…

இடைத்தேர்தல் அறிவிப்பால் ஓபிஎஸ் அணி சார்பில் ஜன.23ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையேயான பனிப்போர் என்பது தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நீட்டிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கருப்பு சட்டையுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவெரா திருமகன் மறைவை அடுத்து, அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ம்…

சொல்லிட்டாங்க…

* தேசிய மல்யுத்த கூட்டமைப்பில் நடக்கும் முறைகேடுகளை பற்றி பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என கூறியதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்* தேர்தலின்போது பாஜ எதையோ கூறுகின்றது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வேறு எதையோ செய்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* சமூக விரோத சக்திகளின் குற்றச் செயல்களை தடுக்க, போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். – மார்க்சிஸ்ட்…

106வது பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்: தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேற்று தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை…

ஏழைகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் டிவிட்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தலைசிறந்த தமிழக முன்னாள் முதல்வராகவும், அதிமுக நிறுவனராக திகழ்ந்து, தனது திட்டங்கள் மூலம் ஏழைகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தில் வணங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ்: கம்மம் நகரில் நடக்கும் கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. கெஜ்ரிவால், பினராயி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டெல்லி, கேரளா, பஞ்சாப் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்மம் நகரில் இந்த பொதுக்கூட்டதற்கு பிஆர்எஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய…

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து

சென்னை:  எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகள் கடந்து அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர். மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். சிறந்த ஆட்சியாளர், எங்களது திருமணத்தை…

அதிமுக ஏ, பி பிரிவை கலைத்து பாஜவுடன் இணைத்து விடலாம்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நாடு முழுவதும் ஒரே தடவையாக நடத்துவது என்பது ஒரு பொருத்தமற்ற செயல். இதை பாஜ, தனது எஜமானரான ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சித்தாந்தத்தை கொண்டுவர நினைப்பது பொருத்தமற்றது. இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவை ஜெயலலிதா இருக்கும்…

 மாமல்லபுரத்தில் பொங்கல் விழா திராவிட வாழ்வியலை, பண்பாட்டை அழிக்க சிலர் பணியாற்றுகின்றனர்: திருமாவளவன் எம்பி பேச்சு

சென்னை: மாமல்லபுரத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக மல்லை கலங்கரை விளக்கு, மக்கள் சேவை மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 15ம் ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கபடி, சிலம்பம், கை பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, விசிக மாநில தொண்டரணி செயலாளர் மல்லை சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம்…

1 34 35 36 37 38 161