Browsing: அரசியல்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் தேர்வு மையங்கள்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தமிழ்நாடு, புதுவையில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன. நீட்…

 இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் பங்கேற்பு: எடப்பாடி அணியினர் புறக்கணிப்பு

சென்னை: டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பங்கேற்றனர். எடப்பாடி அணியினர் கூட்டத்தை புறக்கணித்தனர். புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்த திட்டமிட்டது. இந்த கூட்டத்தில், 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பியது.தமிழகத்தில் இருந்து அதிமுக…

மு.க.அழகிரியிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி – Dinakaran

மதுரை: மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்து, அமைச்சரானதற்கு வாழ்த்து பெற்றார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு 7.45 மணியளவில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி, அங்கிருந்து அழகர்கோவில் ரோட்டில் உள்ள கோர்ட் யார்ட் ஓட்டலுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மதுரை…

பா.ஜ தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் மோடி பிரமாண்ட பேரணி

புதுடெல்லி: பா.ஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி நேற்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அவருக்கு பூக்கள் தூவி கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பா.ஜ.வின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. டெல்லி மாநகராட்சி கூட்ட அரங்கில் 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின்…

திமுக வளர்வதை தடுக்க நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்: இளைஞர் அணி செயலி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘திமுக வளர்வதை தடுக்கவும், எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி சார்பில், முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை, இளைஞர் அணி செயலி தொடக்கவிழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக இளைஞர் அணி செயலியை திமுக தலைவரும்,…

நீ தமிழக மகன்.. நான் தமிழ்நாட்டு மகள்; அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா?.. நடிகை காயத்ரி சவால்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடப்போவதாக காயத்ரி ரகுராம் சவால் விடுத்து டிவிட்டரில் பதிவு செய்து இருப்பது பாஜவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதாகவும், அவர்களை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும், முக்கிய தலைவர்களின் ஆபாச வீடியோக்கள், ஆடியோக்களை வைத்து பெயரைக் கெடுப்பதாகவும் மாநில தலைமை மீது கருத்தை பதிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் அண்மையில் பாஜகவில்…

பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 27ம் தேதி முதல் நடைபயணம்: நடிகை காயத்ரி ரகுராம் அதிரடி அறிவிப்பு

சென்னை: பாஜவில் பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்தும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வரும் 27ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி தந்தார். அதே நேரத்தில்…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். Source link

திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை, திமுக இளைஞர் அணி செயலி தொடக்கவிழா, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இளைஞரணி செயலாளர் பொறுப்பு தலைவரால் வழங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்றரை ஆண்டுகளில் தலைவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. கடந்த ஜூன் 5ம் தேதி முதல்…

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மாற்றாக வேறு எந்த கட்சியும் இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறு. – பிரபல பொருளாதார நிபுணர் அமர்தியா சென்* முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒருவர் கூட மக்களின் பிரச்னையை சரி செய்யவில்லை. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* சனாதன தர்மத்தின் மகிமையை உணர்ந்தால் தான் இந்து சமயத்தின் ஆழம் புரியும். – தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* தமிழர்கள் எல்லோருக்குமே ஒரே…

1 35 36 37 38 39 161