Browsing: ஆரோக்கியம் | Health

உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா மாஞ்சா நூல்… காரணம் என்ன? தீர்வைச் சொல்லும் மருத்துவர்! | dangerous manja thread and solution

பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் சென்னையில் மாஞ்சா நூலால் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது வேதனையளிக்கிறது.உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாஞ்சா நூல் ஆபத்தானதா… அதற்கு காரணம்…

போலி வைத்தியரால் நேர்ந்த கதி; நீரிழிவுக்காக மீனின் பித்தப்பை உண்ட பெண்ணுக்கு சிறுநீரகம் செயலிழப்பு! |Woman eats raw fish gallbladder suffers with kidney failure

நீரிழிவை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வேகவைக்காமல், பச்சையாக மீனின் பித்தப்பையைச் சாப்பிட்ட பெண் ஒருவர், சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர், 48 வயதான சீதா தேவி. இவர், போலி மருத்துவர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு, நீரிழிவு நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில், மீனின் பித்தப்பையைச் சாப்பிட்டு இருக்கிறார். அதன் பின் சீதாவின் நிலை மோசமடைந்து இருக்கிறது. ரோகு மீனின் பித்தப்பையை இந்தப் பெண், அப்படியே பச்சையாக உண்டிருக்கிறார். அதன்பின் தொடர்ந்து மூன்று நாள்களாக…

Doctor Vikatan: முக அழகையே கெடுக்கும் சருமத் துவாரங்கள்… நிரந்தரமாகப் போக்க சிகிச்சைகள் உண்டா? | Doctor Vikatan: Are there any treatment to get rid of facial pores permanently?

Doctor Vikatan: என் வயது 30. சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருப்பது என் முகப்பொலிவையே கெடுக்கிறது. சருமத்துவாரங்கள் பெரிதாக இருக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையை நிரந்தரமாக சரியாக்க சிகிச்சைகள் ஏதும் இருக்கின்றனவா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாசருமத்துவாரங்களை நிரந்தரமாக நீக்க முடியுமா என்ற கேள்வி இன்று நிறைய பேருக்கு இருக்கிறது. அதற்கு முன் சருமத் துவாரங்கள் இருப்பது சாதாரணமானதா, அசாதாரணமானதா, அதற்கு சிகிச்சை அவசியமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். சருமத்துவாரங்கள் பொதுவாக,…

Doctor Vikatan: ஒன்றாக வசிக்கும் தோழிகள்… ஒரே நேரத்தில் பீரியட்ஸ் வருவது இயல்பானதா? | Doctor vikatan – Girlfriends who live together are have periods at the same time?

பெண்களுக்கு 26 முதல் 35 நாள் சுழற்சியில் மாதவிலக்கு வரலாம். அது 5 நாள்கள் முதல் 7 நாள்கள்வரை நீடிக்கலாம். அது நபருக்கு நபர் வேறுபடும். எனவே வீட்டிலோ, விடுதிகளிலோ ஒன்றாக, கருத்து ஒருமித்து வாழும் பெண்களுக்கு இப்படி ஒரே நேரத்தில் பீரியட்ஸ் சுழற்சி வரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான சுவாசம், ஒரே மாதிரியான உணர்வுகள் போன்றவை சாத்தியம். உதாரணத்துக்கு, ஒரு கூட்டத்தில் பலர் ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள் என…

உயிரைக்கொல்லும் சுவாச ஒத்திசை வைரஸ் RSV – உலகின் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா! | US FDA approves world’s first RSV vaccine

அமெரிக்காவில் RSV என்ற சுவாச ஒத்திசை வைரஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவி வருகிறது. இது சாதாரண சளி போன்று லேசான அறிகுறிகளுடன் தோன்றி, பின்நாள்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மஞ்சள் மற்றும் சாம்பல் நிற சளியுடன் கூடிய இருமல், மூச்சுக்குழாய் அலற்சி, நுரையீரல் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்த வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக உள்ளன. நோய்க் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட…

HowTo: பால்வினை தொற்று வராமல் தடுப்பது எப்படி? | How to protect from Sexually Transmitted Infections?

பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதின் விளைவால் HIV உள்ளிட்ட பால்வினைத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த Sexually Transmitted Disease-ல் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் கவிதா கௌதம்… கவிதா கௌதம்“பாதுகாப்பற்ற உடலுறவுதான் பால்வினைத் தொற்று ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு, திருமணமாகாதவர்கள் கூட பாலுறவில் ஈடுபடுகின்றனர். மருத்துவ ரீதியில் இது சரி, தவறு என்று…

மேகங்களில் 29 வகை பாக்டீரியாக்கள்… மழையில் நனைந்தாலே ஆபத்தா? மருத்துவர் தரும் விளக்கம்!

மழையைப் பொழியக்கூடிய மேகங்களில், மருந்துக்கு கட்டுப்படாத 29 வகை பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மழையில் நனைந்தாலே ஆபத்தா என்பதற்கு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். ஃப்ரான்ஸ் மற்றும் கனடாவை‌ சேர்ந்த விஞ்ஞானிகள், வானில் மிதக்கும் மேகங்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல், 2021 வரை சேகரிக்கப்பட்ட மேகத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவுகள் `சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. மழைஆய்வு முடிவில், மேகங்களில் மருந்துக்கு…

சாக்லேட் பிரியர்களே உஷார்! இந்த 6 வகை சாக்லேட்டுகள் ஆபத்தானவை… திரும்பப் பெறும் Cadbury! | Cadbury Chocolate Desserts Recalled Across UK Over Listeria Fears

தொற்றினைப் பரப்பும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான Cadbury, தனது ஆறு வகை சாக்லேட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சாக்லேட்டுகளை விரும்பாதவர்கள்தான் யார்? பல் சொத்தையாவது போன்ற ரிஸ்க் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானவை சாக்லேட்டுகள். அதிலும் குறிப்பாக கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகளுக்கு அனைவரிடமும் தனி மவுசு உள்ளது. கேட்பரி சாக்லேட் | மாதிரிப்படம் ஆனால் சமீப காலமாக இந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் சர்ச்சையில் சிக்குவது…

1 88 89 90 91 92 211