Browsing: ஆரோக்கியம் | Health

நீண்டதூரம் பைக் ஓட்டும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கும் | மரியாதை – S3 E40 | These are the reasons for Male Infertility!

தினசரி வாழ்க்கையில் ஆண்கள் சாதாரணமாகச் செய்கிற சில விஷயங்கள், அவர்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தலாம் என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதுகுறித்து விளக்கமாகப் பேசினார். “தொடர்ந்து பல வருடங்கள், நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டும் போதும் அல்லது பைக் ஓட்டும் போதும், சம்பந்தப்பட்ட ஆண்களுடைய விந்தணுக்கள் நேரிடையாக பாதிக்கப்படும்.  ஏனென்றால், சைக்கிள் அல்லது பைக் ஓட்டும்போது நம்முடைய மொத்த உடல் எடையும், உட்காரும் இடத்தின் நடுப்பகுதியில்,  அதாவது ஆணுறுப்பின் மீதே விழும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற நரம்புகளும், தமனிகளும் (pudendal nerve,…

மெக்டொனால்டு சீஸ் பர்கரில் எலியின் எச்சம்… 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மெக்டொனால்டிற்கு உத்தரவு!|McDonald’s fined after mouse droppings found in cheeseburger

லண்டனில் உள்ள மெக்டொனால்டு உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் சீஸ் பர்கர் ஆர்டர் செய்திருக்கிறார். சீஸ் பர்கரை பாதி சாப்பிட்ட நிலையில், அதில் எலியின் எச்சம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் குறித்து 2021-ல் புகார் அளித்து இருக்கிறார்.அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள், அந்த உணவகத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். உணவகத்தின் பல பகுதிகளிலும், சமையல் அறைகளிலும் எலியின் எச்சம் இருப்பதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மெக்டொனால்டு அதோடு சமையலறை…

Doctor Vikatan: சாப்பாட்டுக்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் மாற்றமில்லாத சர்க்கரையளவு… சாதாரணமானதா? | Doctor Vikatan: Unchanged blood sugar before and after meals is normal?

இந்த இரண்டுக்குமே வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் விரல் நுனியிலிருந்து எடுக்கப்படுவதில் நரம்பு மற்றும் தமனி என இரண்டின் ரத்தமும் சேர்ந்து வரும். அதனாலும் வேறுபாடு இருக்கலாம்.ரத்தச் சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 88, சாப்பிட்ட பிறகு 89 என குறிப்பிட்டுள்ளீர்கள். கேபிலரி பிளட் குளுக்கோஸ் முறையில் விரல் நுனியில் ஊசியால் குத்திச் செய்யப்பட்ட டெஸ்ட் காரணமாக இப்படி இருக்கலாம். உங்களுக்கு இன்சுலின் சுரப்பு நார்மலாக இருப்பதாக அர்த்தம். வளர்சிதை மாற்றச் செயல்பாடும் நார்மலாக இருப்பதாகப்…

தமிழகத்தில் `ஹெலிகல் டோமோதெரபி' திட்டத்தை அறிமுகம் செய்யும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்!

இந்தியாவில் மிக விரிவான, நவீன புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் தனது செயல்நோக்கத்தையொட்டி டோமோதெரபி என அழைக்கப்படும் மிக நவீன, புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை தொழில்நுட்பத்தின் சமீபத்திய தொகுப்பினை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை அப்போலோ பரோட்டான் கேன்சர் சென்டர் மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது. புரோட்டான் தெரபியை வழங்கும் தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்குப் பிராந்தியத்தின் முதல் மையமாக புரோட்டான் மற்றும் போட்டான் சிகிச்சை முறைகளில் மிக…

திரையரங்கில் படம் பார்த்த பெண்ணை கடித்த எலி… ரூ. 60,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! |Consumer court orders theatre to pay 60,000 rupees to woman

அதனைத் தொடர்ந்து அப்பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் 6 லட்சம் இழப்பீடு கோரி புகார் அளித்தார். புகாரைத் தள்ளுபடி செய்யுமாறும், 15,000 ரூபாய் இழப்பீடாக வழங்க ஒப்புக் கொள்வதாகவும் திரையரங்கு தரப்பில் கூறப்பட்டது.பெண்ணின் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த நுகர்வோர் நீதிமன்றம், திரையரங்கின் சுகாதாரமின்மை மற்றும் அலட்சியத்தைச் சுட்டிக் காட்டியது.அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மன வேதனை ஏற்படுத்தியதாக 40,000 ரூபாயும், வலி மற்றும் துன்பத்திற்காக 20,000 ரூபாயும், மருத்துவக் கட்டணத்திற்கு 2,282 ரூபாயும், சட்ட நடவடிக்கை…

கைகளுக்கு சரியான அளவு சானிடைசர் பயன்படுத்துகிறீர்களா… கை கழுவுவதில் உள்ள தவறு; ஆய்வு சொல்வதென்ன?|Are you using the right amount of hand sanitizer, what research says?

அதுமட்டுமல்லாமல் கைகளைச் சுத்தம் செய்யும்போது பெரும்பாலும் விரல் நுனிகள் மற்றும் அதிகம் பயன்படுத்தும் கையின் (Dominant Hand) பின்புறம் சுத்தம் செய்யப்படாமல் விடப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆய்வு முடிவுகள்:* உங்கள் கைகளைக் கழுவுவதற்கான சரியான வழி, உங்கள் விரல் நுனிகளைச் சுத்தம் செய்வது.* கைகளை கிருமி நீக்கம் செய்ய பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்களின் அளவு போதாது. 1.5 மி.லி அளவு ஹேண்ட் சானிட்டைசர் சிறிய கைகளுக்குக் கூட போதாது.* சராசரி கை அளவுள்ளவர்களுக்கு, 3 மி.லி…

`முடிவுக்கு வந்தது கோவிட் அவசர நிலை’ – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு | Covid global health emergency is over, WHO says

தற்போதும் லட்சக்கணக்கான மக்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டு போராடிக்கொண்டிருகிறார்கள். உடல் மற்றும் பொருளாதார ரீதியில் தொற்றுக்குப் பிறகான பாதிப்பிலும் மக்கள் இன்னும் சிரமத்தை சந்தித்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம், இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதை தெரிவிப்பதற்காக மட்டுமே. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். தேவைப்பட்டால் மீண்டும் கொரோனா அவசரக்குழு கூட்டத்தை கூட்ட தயங்க மாட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பொருந்தொற்றை மிகுந்த கவனத்துடத்துடன் கண்காணித்து வந்தது…

Doctor Vikatan: சதைப்பிடிப்பில்லாத உடல்வாகு, அடிக்கடி மயக்கம்… டீன் ஏஜ் மகனுக்கு சிகிச்சை அவசியமா? | Doctor Vikatan: lean Body, fainting…need treatment for teenage son?

Doctor Vikatan: என் 17 வயது மகன் உடல் மெலிந்து, சதைப்பிடிப்பின்றி எலும்புகள் தெரியும்படி இருக்கிறான். அதேநேரம் அவனது உடலிலோ, படிப்பிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ஆக்டிவ்வாகவும் தெம்புடனும் ஓடியாடுகிறான். எனினும், காலை வெயில், காற்றோட்டமில்லாத கூட்ட நெரிசல் போன்ற தருணங்களில் மயக்கமடைந்திருக்கிறான். இது கவலைப்படக்கூடியதா… சிகிச்சை தேவையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்உங்களுடைய மகன் எப்போதுமே ஒல்லியான உடல்வாகுடன்தான்…

`நீ மண்ணில் வந்து உதிக்க உன்னை யாரும் கேட்கவில்லை’; ஆதரவில்லா குழந்தைகளுக்காக `குழந்தை பெட்டிகள்’!|Sri lanka introduces Baby Boxes to leave unwanted infants

குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச்செல்லும் பெற்றோருக்கு உதவ, `குழந்தை பெட்டிகள்’ (Baby Boxes) என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்க உள்ளதாக, இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது.குழந்தையை வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள், வளர்க்க முடியாத பெற்றோர்கள் குழந்தையை சாலைகளில் விட்டுச் செல்கின்றனர். இப்படி வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள் அரசிடம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பைக் கொடுக்கலாம். இவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. கடந்த சில வருடங்களில் 60 பெற்றோர்கள் குழந்தைகளை சாலையில் கைவிட்டுள்ளனர். கடந்த 6 வருடங்களில் பல காரணங்களுக்காக…

உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா மாஞ்சா நூல்… காரணம் என்ன? தீர்வைச் சொல்லும் மருத்துவர்! | dangerous manja thread and solution

பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் சென்னையில் மாஞ்சா நூலால் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது வேதனையளிக்கிறது.உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாஞ்சா நூல் ஆபத்தானதா… அதற்கு காரணம்…

1 90 91 92 93 94 214