கேரளா: கர்ப்பிணிகளுக்கான `கனிவு 108′ ஆம்புலன்ஸுக்கு ஆப்.. விரைந்து செல்ல ரூட் இனி ஈஸி! |Kerala: Kaniv-108 app for pregnant women ambulance
கேரள மாநிலத்தில் கர்ப்பிணிகளுக்கு எனப் பிரத்யேகமாக “கனிவு 108′ என்ற ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பினராயி விஜயன் கடந்த முறை முதல்வராக இருந்தபோது இந்த ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் தாய், சேய் பராமரிப்புக்குப் பயிற்சிபெற்ற செவிலியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். சில நேரங்களில் எதிர்பாரா விதமாக வீடுகளில் பிரசவம் நடந்தாலும் கனிவு 108 அம்புலன்ஸ் சேவை மூலம் உதவி விரைந்து கிடைக்கிறது. இந்த ஆம்புலன்ஸ்களிலும் பல பிரசவங்கள் நடந்துள்ளன். வழக்கமான அம்புலன்ஸ் போன்றே 108…









