Doctor Vikatan: குறிப்பிட்ட வயதுக்கு மேல் குளிர்ந்த நீரில் குளிப்பது ஆபத்தானது என்பது உண்மையா?|Can we bath in cold water after certain age?

Share

Doctor Vikatan: பல வருடங்களாக குளிர்ந்த நீரிலேயே குளித்துப் பழகிவிட்டேன். அறுபது வயதுக்கு மேல் மிதமான வெந்நீரில் குளிப்பதுதான் நல்லது என்கிறார்களே… அது உண்மையா? குளிர்ந்த நீரில் குளிப்பதை எத்தனை வயது வரை தொடரலாம்?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சிறுவயதிலிருந்தே குளிர்ந்த நீரில் குளித்துப் பழகிய பலருக்கும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதைத் தொடர்வது சிக்கலை ஏற்படுத்தலாம். அதிலும் 60 வயதுக்கு மேலானவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.  காலச் சூழலுக்கேற்ப அவர்கள் மாறிக்கொள்ள வேண்டும். 

குறிப்பாக குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் இளம்சூடான நீரில் குளிப்பதுதான் சிறந்தது.  குளிருக்கு இதமாக கொதிக்கிற நீரில் குளிப்பதும் தவறு. அது சருமத்தை பாதிக்கும். மிதமான சூடுள்ள நீரே சரியானது. அதாவது சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றபடி, உடலுக்கும் வெப்பத்தைக் கொடுக்கும்படியான சூடு போதுமானது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com