Doctor Vikatan: மாதவிலக்கு நாள்களில் முகத்திலும் அக்குளிலும் வரும் கட்டிகள்… தீர்வு என்ன? | What causes lumps on the face during menstruation?

Share

ஹார்மோன்களின் செயல்பாடே இந்தப் பிரச்னைக்காக முக்கிய காரணம். அதனால்தான் பீரியட்ஸ் நேரத்தில் இந்தப் பிரச்னை அதிகரிக்கிறது.  புற அழகு சம்பந்தப்பட்டது என்பதால் இந்தப் பிரச்னை உளவியல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கும். 

ஆன்டிபயாடிக் மருந்துகள்

ஆன்டிபயாடிக் மருந்துகள்

இந்தப் பிரச்னையை குணப்படுத்த நிறைய சிகிச்சைகள் உள்ளன. இன்ஃபெக்ஷனை சரிசெய்ய வேண்டியிருக்கும். ஆன்டிபயாடிக் கொடுத்து மேல்பூச்சுக்கான ஆயின்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். ஒருவேளை பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருந்தால் அறுவைசிகிச்சையின் மூலம் கட்டிகளை நீக்க வேண்டியிருக்கும். ஹார்மோனல் தெரபியும் தேவைப்படலாம். லேசர் சிகிச்சையிலும் இதற்கான தீர்வு உண்டு.

எந்தச் சிகிச்சை பலனளிக்கும் என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும். சாதாரண க்ரீம் உபயோகித்தோ, வீட்டு சிகிச்சைகளின் மூலமோ இதை குணப்படுத்த முடியாது. முறையான சிகிச்சை கொடுக்காவிட்டால் இந்தப் பிரச்னை மீண்டும் மீண்டும் பாதித்து தொந்தரவு கொடுக்கும். அப்படி வரும்போது ஒவ்வொரு முறையும் அதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகும்_ சரியான உடல் எடையைத் தக்கவைப்பது, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தளர்வான ஆடைகள், உடல் சுகாதாரம் என வாழ்வியல் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com