அடிக்கடி உடைந்துபோகும் நகங்கள்…. இழுக்கும் நரம்புகள்… காரணமும் தீர்வுகளும் என்ன?|What causes nails to break often?

Share

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருக்கிறதா என்று குறிப்பிடவில்லை. ஒருவேளை நீரிழிவு இருந்தால், ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாதபட்சத்தில் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இந்த வயதில் பலருக்கும் “பெரிஃபெரல் நியூரோபதி’ ( Peripheral neuropathy) என்ற பிரச்னை இருக்கலாம். அதில் நரம்புகள் இழுக்கும்படியான உணர்வு இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அந்தப் பிரச்னை  இருந்தால், சத்துக்குறைபாடு இருக்கக்கூடும். முறையான மருத்துவப் பரிசோதனையில் அதையும் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுங்கள்.

டாப்ளர் ஸ்டடி (Doppler Study) என்ற பரிசோதனையைச் செய்து பார்த்து கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம். கூடவே வைட்டமின் டி 3 அளவு எவ்வளவு இருக்கிறது என்றும் பார்த்துவிட்டு, மருத்துவர் பரிந்துரையோடு வைட்டமின் டி 3 மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். நகங்கள் உடைந்துபோக, பெருமபாலும் கால்சியம், தாதுச்சத்துகள், வைட்டமின்கள் போன்றவற்றின் குறைபாடே காரணமாக இருக்கக்கூடும். பயப்பட வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com