Doctor Vikatan: என் பெயர் தினேஷ். வயது 35. கடந்த 6 மாதங்களில் என் எடை 10 கிலோ வரை குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன… கடந்த ஓராண்டாக சரும நோய் பிரச்னை காரணமாக, அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறேன்.
இதுதான் காரணமாக இருக்குமா…. சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்ததில் ப்ரீ டயாபட்டிக் ( Pre-Diabetic) என்ற நீரழிவுக்கு முந்தைய நிலை இருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு உடல் எடை குறைய காரணம் என்ன? விளக்கம் அளிக்கவும்.
-Dinesh RM, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
கடந்த ஆறு மாதங்களில் எடை குறைந்திருப்பதாகவும், சருமப் பிரச்னை காரணமாக அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். ப்ரீ டயாபட்டிக் என்று கண்டுபிடிக்கப்பட்டதையும் சொல்லியிருக்கிறீர்கள். அதை நீங்கள் எந்த வகைப் பரிசோதனையின் மூலம் உறுதிசெய்தீர்கள் என்ற விவரம் இல்லை.