Browsing: ஆரோக்கியம் | Health
மகாராஷ்டிரா: பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை, வாழைப்பழம்! | Maharashtra: Eggs, bananas in lunch for school students!
மகாராஷ்டிராவில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இது வெளியில் தயார் செய்து கொண்டு வந்து பள்ளிகளில் சப்ளை செய்யப்படுகிறது. எப்போதும் கிச்சடி எனப்படும் சாம்பார் சாதம் போன்ற ஒரு உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும் மும்பை போன்ற நகரங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக குடிசைப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சேர்த்து…
`பல ஆண்டுகளுக்கு முன் கண்ணில் ஏற்பட்ட காயம்’ – அரிய பாதிப்புக்குள்ளாகி மீண்ட பழம்பெரும் நடிகை ஜீனத் | Zeenat Aman Diagnosed With Eye Problem Ptosis, Undergoes Surgery
1970-80களில் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீனத் அமன். இவர் ‘தம்மர தம்’ என்ற பாடலில் ஆடிப்பாடி அந்தக் காலத்து இளைஞர்களைக் கிறங்கடித்தவர். பல படங்களில் கவர்ச்சியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்தார். தற்போது 70 வயதாகும் இவர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இவருக்குக் கண்ணில் பிரச்னை ஏற்பட்டதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் நேற்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அவரின் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளார்.ஜீனத் அமன்அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘…
Doctor Vikatan: வாந்தி எடுப்பதால் காலை உணவை மறுக்கும் குழந்தை… செரிமான பிரச்னைக்குத் தீர்வு என்ன? | Doctor Vikatan: How to plan food for children?
Doctor Vikatan: என் மகனுக்கு நான்கரை வயது ஆகிறது. எல்கேஜி படிக்கிறான். தினமும் காலை உணவாக இட்லி, தோசை, சாதம் என ஏதாவது ஒன்றை காலை 9 மணிக்கு கொடுக்கிறோம். ஆனால் பள்ளிக்குச் சென்ற சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கிறான். ஆறு நாள்கள் பள்ளிக்குச் சென்றதில் நான்கு நாள்கள் இது போல் நடந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது… மதியம் மற்றும் இரவு நேரத்தில் இப்படி நடப்பதில்லை. காலை மற்றும் இரவு நேரத்தில் பால் குடிக்கிறான். வாந்தி எடுப்பதால் காலை உணவையே…
Doctor Vikatan: முறையற்ற மாதவிடாய் சுழற்சி; ஒரு வருடம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை… என்ன தீர்வு?
Doctor Vikatan: என் மகளுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக வருவதில்லை. கடந்த ஒரு வருடமாக ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆனாலும், பலனில்லை. அவளுக்கு மிகச் சரியாக என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவளின் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த ஏதேனும் வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் அ. முகமது சலீம். அ. முகமது சலீம்Doctor Vikatan: உறக்கமில்லாத இரவுகள்… உணவுப்பழக்கத்துக்கும் தூக்கத்துக்கும் தொடர்புண்டா?உங்கள் மகளின் முறையற்ற மாதவிலக்கு சுழற்சி, ஒரு வருடம் ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பிறகும், ஒழுங்கு பெறவில்லை என்பது …
இந்த நோய்கள் இருந்தால் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பிடக் கூடாதாம்! எதற்கு இந்த அரிசி? |Is Enriched rice the only thing needed to eliminate nutritional deficiency?
உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கு எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கி.வெங்கடராமன் எழுதிய “செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு தமிழர் கிராமங்கள் அழிப்பு’ என்ற நூல் திறனாய்வு விளக்கக் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.மகளிர் ஆயம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மகளிர் ஆயம் தலைவர் அருணா, துணைத்தலைவர் க.செம்மலர், பொதுச்செயலாளர் மு.செந்தமிழ்ச்செல்வி, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம் ), தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் மற்றும் சில உறுப்பினர்கள்…
டெல்லி: அதிகரிக்கும் காற்று மாசுபாடு; எகிறும் ஏர் ப்யூரிஃபையர் விற்பனை… மக்களின் நிலைமை இதுதான்! |Air purifier sales surge in Delhi as pollution level increased
அதோடு ஏர் ப்யூரிஃபையர் விற்பனையும் அதிகரித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வீட்டின் அமைப்புக்கு ஏற்ற வகையில், பல வடிவங்களில் 8,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை ஏர் ப்யூரிஃபையர்கள் விற்கப்படுகின்றன. ஏர் ப்யூரிஃபையர் இந்தச் சாதனங்கள் காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள், கெட்ட வாடை, தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாசில் இருந்து மக்களைப் பாதுகாக்க இச்சாதனங்கள் பெருமளவில் உதவுகின்றன. அதிகரிக்கும் ஏர் ப்யூரிஃபையர் விற்பனை குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில், “20,000 முதல் 25,000 ரூபாய்…
`பார்ட்னரின் சடலத்துக்கு கீழே மறைந்து இருந்தேன்’ – ஹமாஸ் தாக்குதலில் தப்பிய பெண் உருக்கம்! | Israeli Model Reveals She Hid Under Her Boyfriend’s Dead Body During Hamas Attack
துப்பாக்கி ஏந்திய ஒருவர் எங்களைக் கண்டுபிடித்து என் காதலனை மார்பில் சுட்டார். அவர்கள் எங்களை முற்றிலும் வளைத்து இடைவிடாமல் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்குக் காலிலும் இடுப்பிலும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டது. எனக்குக் காயங்கள் இருந்தபோதும் இரண்டு மணிநேரம் எந்தச் சத்தமும் ஏற்படுத்தாமல் பிணக் குவியல்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்தேன். என் பார்ட்னரின் சடலத்துக்குக் கீழ் மறைந்து இருந்தேன். உடல்களின் குவியலுக்கு மத்தியில் நான் இருந்ததால் இறந்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள். அங்கே குப்பைத் தொட்டியில் மறைந்திருந்த 16 பேரில்…
Doctor Vikatan: உறக்கமில்லாத இரவுகள்… உணவுப்பழக்கத்துக்கும் தூக்கத்துக்கும் தொடர்புண்டா? I Is there any connection between foodhabits and a good sleep?
Doctor Vikatan: என் வயது 36. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு தினமும் இரவில் தூக்கம் சரியாக இல்லை. இத்தனைக்கும் இரவில் மிகவும் மிதமான உணவுகளைத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் சரியான தூக்கமில்லை. நல்ல தூக்கத்தை வரவழைப்பதில் உணவுப்பழக்கத்துக்குப் பங்கு உண்டா…. அப்படியானால் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும் என வழிகாட்டுவீர்களா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஷைனி சுரேந்திரன்இரவு உணவுக்கும் உங்கள் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் இரவில் சரியான…
அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 117
பெண்கள், கணவரிடம் நியூட் செக்ஸுக்கு நோ சொல்வது காலங்காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு கேஸ் ஹிஸ்டரியைத்தான் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் இன்றைக்கு நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். ”அவர்கள் புதிதாகத் திருமணமான இளம் தம்பதி. இருவருமே சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். நன்கு படித்து கைநிறைய சம்பாதிக்கும் வேலையில் இருக்கிறார்கள். இருவரும் காதலித்துக் கைப்பிடித்தவர்களும்கூட. ‘செக்ஸ் லைஃப்ல திருப்தியில்ல…’ என்கிற பிரச்னையுடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். முதலில் கணவரிடம் பேசினேன். Sexologist Kamarajமனைவியை திருப்திசெய்ய இப்படிப் பண்ணலாமா? – காமத்துக்கு மரியாதை…








