அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது கெல்சி ஹேட்சர் என்ற பெண், பிறக்கும்போதே மிக அரிய நிலையான `யூட்ரஸ் டைடெல்பிஸ்” (Uterine Didelphys) என்ற மருத்துவச் சொற்களில் அழைக்கப்படும் இரட்டை கருப்பைகளோடு பிறந்தார்.
கெல்சி – காலப் தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் நான்காவதாகக் கருவுற்றார். எட்டாவது வார பரிசோதனையின்போது கெல்சியின் இரண்டு கருப்பைகளிலும் கரு இருப்பது தெரிய வந்தது.
யூட்ரஸ் டைடெல்பிஸ்
பிறக்கும்போதே மிக அரிதாக ஒரு சில பெண் குழந்தைகள் இரண்டு கருப்பை அல்லது இரண்டு கருப்பை வாயுடன் பிறப்பார்கள். இதையே மருத்துவ உலகில் `யூட்ரஸ் டைடெல்பிஸ்’ என்று குறிக்கின்றனர். 17 வயதிலிருந்தே தனக்கு இரட்டை கருப்பை இருப்பதை கெல்சி அறிந்திருந்தார். முந்தைய மூன்று கர்ப்பத்திலும் ஒரு கருப்பையில் மட்டுமே கரு உருவாகியிருந்ததால் எவ்வித சிக்கலும் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.