அவரது பந்துவீச்சில் இதை நீங்கள் பார்க்கலாம். எனவே, இந்த கூட்டணிதான் நாங்கள் களமிறங்கி பயமில்லாமல் விளையாட பெரும் நம்பிக்கையைத் தருகிறது.
படிக்கல்லின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் முதல் பாதியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவர் மீது அழுத்தம் விழாமல் இருக்க, நானும் அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க வேண்டியது எனது பொறுப்பாக இருந்தது.

அந்த பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து அழுத்தத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.
எந்தவித சந்தேகமும் இல்லாமல், மிகத் துல்லியமான திட்டத்துடன் அந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். அதுதான் எங்களுக்குக் கைகொடுத்தது.
சொந்த மண்ணில் (சின்னசாமி மைதானம்) விளையாடி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பாக இருந்தது. இங்கு விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வென்றுள்ளது எங்களுக்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாகும்” என்று பேசியிருக்கிறார்.