‘MI vs CSK : மும்பை அணியை எப்படி வீழ்த்தியது சென்னை அணி?’ |’MI vs CSK : Match Report
ஆனால், ‘அவசரப்பட்டு சந்தேகப்பட்டுட்டீங்களே சார்..’ என்பதைப் போல இருந்தது சென்னை அணியின் பௌலிங். ‘அங்குட்டு வேணாம். இங்குட்டு போவோம்’ என்பதைப் போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் ஸ்பின்னரான அகீல் ஹூசைனை வைத்து அட்டாக்கை ஆரம்பித்தார் ருத்துராஜ். கடந்த மூன்று ஆண்டுகளின் ருத்துராஜின் கேப்டன்சி க்ரைண்டர் முதல் முறையாக ஓடியதைப் போல தெரிந்தது. மலேவர், நமன் தீர், சூர்யகுமார், திலக் வர்மா என முக்கிய விக்கெட்டுகள் எல்லாவற்றையும் வீழ்த்தினார் ஹூசைன். ‘பந்தயத்துக்கு நாங்க வரலாமா..’ என முக்கியமான கட்டத்தில்…









