பாம்புகள் கால்களே இல்லாமல் அதிவேகமாக நகர்வது எப்படி? பரிணாம வளர்ச்சியின் அறிவியல் உண்மை
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பாம்புகள் தரையில் சத்தமின்றி ஊர்ந்து செல்லும், வியக்கத்தக்க வேகத்தில் நகரும், சிரமம் ஏதுமின்றி மரங்களில் ஏறும், நீரில் நீந்தும் பாம்புகளைக் காணும்போது பலருக்கும் ஒரு பொதுவான கேள்வி எழுவதுண்டு. அது, கால்களே இல்லாத ஓர் உயிரினம் எப்படி இவ்வளவு திறமையாக நகர முடிகிறது?பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவையாகத் தோன்றும் இந்த ஊர்வன உயிரினம், பூமியின் ஏறக்குறைய அனைத்து கண்டங்களிலும் தடையேதுமின்றி இயங்குவதற்கு உதவும் வகையில், பல்வேறு விதமான தகவமைப்புகளை பெற்றுள்ளது. பெரும்பாலான நிலவாழ்…









