அமெரிக்கா – இரான் ஒப்பந்தத்தை வரவேற்றாலும் வளைகுடா நாடுகளுக்கு கவலை தரும் விஷயம் என்ன?

Share

அமெரிக்கா - இரான் ஒப்பந்தம், சௌதி அரேபியா, வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, மனாமா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்,  அமெரிக்கா, மார்கோ ரூபியோ

பட மூலாதாரம், Eric Lee / POOL / AFP via Getty Images

படக்குறிப்பு, 2026 ஜூன் 25 அன்று, மத்திய கிழக்குக்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக மனாமா நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ சந்திப்பு நடத்தினார்

    • எழுதியவர், சாலி நபில்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையிலான மோதல் தணிவதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றத்தில் சிக்கியுள்ள வளைகுடா அரபு நாடுகள், நிலைமையை கவலையுடன் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

மீண்டும் பதற்றம் அதிகரித்தால், அதிகம் பாதிக்கப்படப் போவது இந்த நாடுகள் தான்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளையும் இரான் இலக்கு வைத்தது.

இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள், எண்ணெய் வளம் மிக்க இந்த நாடுகளின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான பிம்பத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com