Yearly Archives: 2026

நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி – 3 வார்டன்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34). வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை கைதியாக நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 13-ம் தேதி) இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில்…

எம்பாப்பே vs யமால்! உலகக்கோப்பை அரையிறுதியில் அனல் பறக்கும் யுத்தம்! | kylian mbappe vs lamine yamal fifa world cup semi final

பிரான்ஸ் அணி மற்ற அணிகளை விட மிகவும் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட வாங்காமல் தங்களது தற்காப்பின் பலத்தை நிரூபித்துள்ளனர். சுவீடனுக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கிலும், பராகுவேக்கு எதிராக எம்பாப்பேவின் பெனால்டி கோல் மூலம் 1-0 என்ற கணக்கிலும், காலிறுதியில் மொராக்கோவை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி, அதிக சிரமமின்றி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.ஸ்பெயினின் கதை இதற்கு நேர்மாறானது. நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு…

சஞ்சு சாம்சன் – வைபவ் சூர்யவன்ஷி தேர்வில் கம்பீர் செய்த தவறு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் நடந்துகொண்ட விதம் குறித்து கௌதம் காம்பீர் கிரிக்கெட் நிபுணர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.பிரசுரிக்கப்பட்டது 14 ஜூலை 2026, 13:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது.விராட் கோலி, ரோஹித்…

அஜித்ப வாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குளறுபடி: தலைவர் சுனேத்ரா பவார் பதவி விலக 15 நாள் கெடு!

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதோடு கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார் கட்சிக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக சுனேத்ரா பவார் இப்பதவிகளை ஏற்றுக்கொண்டார். கட்சி தலைவர் பதவியை…

‘சென்னை அணியிலிருந்து ப்ளெம்மிங் விலக காரணமாக இருந்த அந்த 3 விஷயங்கள்!’ – விரிவான அலசல் |Why Did Stephen Fleming Leave Chennai Super Kings? 3 Major Reasons Explained

ஆனால், ப்ளெம்மிங்கின் அணுகுமுறையும் சிந்தனையும் பழமைவாய்ந்தது. நவீன டி20 க்களுக்கு ஏற்ற பரபரப்பான வியூகங்கள் அவரிடம் இல்லை. மேலும் டி20 க்களுக்கு ஒரு இளம் அணியை கட்டமைக்க வேண்டும் என்கிற புரிதலையும் அவர் தாமதமாகத்தான் கண்டடைந்தார். ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் இளம் வீரர்களை பயிற்சி கொடுத்து மெருகேற்றுவதற்காக அணியை நடத்தவில்லை எனுமளவுக்கு காட்டமாகவெல்லாம் பேசியிருந்தார். ப்ளெம்மிங்கை பொறுத்தவரை டி20 யை ஓடிஐயின் குறுகிய வடிவமாகவே பார்த்தார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள் பார்த்து ஆட வேண்டும். பின்னர்…

தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டில் 461 எம்பிபிஎஸ் சீட் குறைகிறதா? புதிய சர்ச்சையின் பின்னணி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.முந்தைய திமுக அரசால் தான் இந்தச் சூழ்நிலை உருவாகியிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் “அரசு இடங்கள் பறிபோகக் கூடாது என்பது தான் திமுக…

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்… பாதிப்பா?' – சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது…”சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு Klebsiella pneumoniae பாக்டீரியா மற்றும் covid 19 தொற்றும் ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு…

“‘Leaving With Great Memories’: Stephen Fleming Parts Ways With Chennai Super Kings as Head Coach” |’நல்ல நினைவுகளோடு விடைபெறுகிறேன்!’ – சென்னை அணியிலிருந்து பயிற்சியாளர் ப்ளெம்மிங் விலகல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ப்ளெம்மிங் விலகியிருக்கிறார்.சென்னை அணியின் நிர்வாகமும் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “ப்ளெம்மிங்குடனான 18 ஆண்டுகால அசாத்திய பயணம் மறக்க முடியாதது. சென்னை அணியின் தொடக்கக் காலத்திலிருந்து அவர் எங்களுடன் பயணித்தார். நன்றி

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? இது யுபிஐ மற்றும் கிரிப்டோவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? இது யுபிஐ மற்றும் கிரிப்டோவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? முன்னோடித் திட்டத்தில் எந்தெந்த வங்கிகள் இணைந்துள்ளன, இதில் எப்படி இணைவது?மேலும் டிஜிட்டல் ரூபாய் இந்தியாவில் ரொக்கப் பணத்திற்கு மாற்றாக அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்தக் கேள்விகளுக்கான பதில்களை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.டிஜிட்டல் கட்டண முறையை விரிவுபடுத்தவதையும், வாடிக்கையாளர்களுக்குப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதையும் நோக்கமாகக்…

இது வெறும் வெற்றியல்ல, சரித்திரத் தருணம்! | Harmanpreet Kaur India women historic test win

அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ஒரு அணி, “கிரிக்கெட்டின் மெக்கா’ எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது சாதாரண விஷயமல்ல. இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா மற்றும் மூன்றாம் நாளில் அபார சதம் விளாசிய யாஸ்திகா பாட்டியா ஆகியோர் வலுவான அடித்தளம் அமைத்தனர். பந்துவீச்சில், அறிமுக வீராங்கனை கிராந்தி கௌட் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரைப் பதிவு செய்து அசத்தினார். இந்திய பேட்டர்கள்,…