சஞ்சு சாம்சன் – வைபவ் சூர்யவன்ஷி தேர்வில் கம்பீர் செய்த தவறு என்ன?

Share

வைபவ் சூர்யவன்ஷி ,சஞ்சு சாம்சன்,   கௌதம் காம்பீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் நடந்துகொண்ட விதம் குறித்து கௌதம் காம்பீர் கிரிக்கெட் நிபுணர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது.

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணிக்குத் திரும்புகின்றனர்.

ஆனால், இரண்டு டி20 தொடர்களிலும் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வீரர்கள் மட்டுமின்றி அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் விமர்சனங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.

குறிப்பாக, சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரை அணியில் சேர்த்ததும் பின்னர் நீக்கியதுமான அணித் தேர்வு முடிவுகள் குறித்து கம்பீர் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அணி நிர்வாகம் இரட்டை நிலைப்பாடுகளைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், ‘சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சனுக்கு இடையே விளையாடப்படும் இந்த மியூசிக்கல் சேர் விளையாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்றும் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com