கரூர்: தலைமை ஆசிரியையைத் தாக்கிய ஆசிரியை; சஸ்பென்ட் செய்த அதிகாரி; வைரல் வீடியோவில் நடந்தது என்ன? \ Karur: Teacher assaults headmistress; official issues suspension; what happened in the viral video?
கரூர் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் கலைமதி. இவர், சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் அண்மையில் சைல்டு லைனில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இதுகுறித்த விசாரணை அடிப்படையில் கலைமதி குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியை புவனா அறிக்கை அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கலைமதி, வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த புவனாவை…
