சத்தமாகப் பேசும் பிரச்னை… அடுத்தவருக்கு அசௌகர்யம்… தீர்வு உண்டா? | Speaking too loudly… causing discomfort to others… is there a remedy?
முதல் விஷயம் இயர்போன்ஸ் (Earphones) அல்லது ஏர்பாட்ஸ் (Airpods) பயன்பாடு. இப்போதெல்லாம் பலரும் காதுகளில் இயர்போனையோ, ஏர்பாட்ஸையோ மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே மற்றவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது கவனம் வேறொன்றில் இருப்பதால், அந்தச் சூழலில் மற்றவர்களுடன் பேசும்போது தங்களையும் அறியாமல் உரத்த குரலில் பேசுவார்கள். உங்களுக்குக் கேட்கும் திறன் குறைபாடு (Hearing Loss) ஏதேனும் உள்ளதா என்பதையும் நீங்கள் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள், தங்களுக்குச் சரியாகக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தானாகவே உரத்த குரலில் பேச…









