‘சூர்யவன்ஷியின் போராட்டம் வீண்; தட்டித் தூக்கிய குஜராத் டைட்டன்ஸ்! – எப்படி வென்றது கில் & கோ? |Suryavanshi’s Lone Battle Not Enough as Gujarat Titans Register Comfortable Victory

Share

கில் – சாய் சுதர்சன் கூட்டணி தான் ராஜஸ்தானின் இறுதிப்போட்டி கனவுக்கு இறுதி உரை எழுதியது. மொத்தம் 11 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்துள்ளது இந்த இணை. இருவரில் ஒருவர் இருந்தாலும் ஆபத்து எனும் பட்சத்தில் இருவரையுமே செட்டில் ஆக ராஜஸ்தான் அனுமதித்து விட்டது. 14 ரன்களில் விடப்பட்ட சாய் சுதர்சனின் கேட்சும் போட்டியின் போக்கு குஜராத்துக்கு சாதகமாவதற்கு காரணமானது.

பவர்பிளேயிலேயே 69 ரன்களையும், பத்து ஓவர்களிலேயே 127 ரன்களையும் எடுத்து ராஜஸ்தானுக்கான எல்லா வாயில்களையும் அடைத்து விட்டனர். நம்பவே முடியாத வகையில் இரண்டாவது முறையாக சாய் சுதர்சன் ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்திருந்தார். அது நடக்காது போயிருந்தால் போட்டி இன்னமும் சில ஓவர்கள் மீதமிருந்த போதே முடிவுக்கு வந்திருக்கும். 14-வது ஓவருக்குப் பின்பு ராஜஸ்தான் ராயல்ஸ் கட்டுக்கோப்பாக பந்துவீசி லகானைக் கைப்பற்ற முயற்சித்திருந்தது, ஆனால் அதற்குள் போட்டி அவர்களது கையிலிருந்து கில் – சாய் சுதர்சன் கூட்டணியால் விடுவிக்கப்பட்டு பல கிலோமீட்டர்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்லப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.

அற்புதமாக லீக் சுற்றினை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பல ஏற்ற தாழ்வுகளையும் தொடர்ச்சியாக பார்த்து வந்தது. இருப்பினும் கடைசிப் பேருந்தைப் பிடித்து ப்ளே ஆஃப்பில் நுழைந்து குவாலிஃபயருக்குள்ளும் எட்டிப் பார்த்ததில் The Lion’s Share எனும்படி சூர்யவன்சியின் பங்கே மிக அதிகம். அதே போராட்டம் எல்லாத் தரப்பிலிருந்தும் வந்திருந்தால் இறுதிப்போட்டி ராயல்ஸ் வெர்ஸஸ் ராயல்ஸ் என மாறியிருக்கும். 2003 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருதைப் பெற்றும் அணியை கோப்பையை வெல்ல வைக்க முடியாத சச்சினின் கண்களில் இருந்த அதே வலியை சூர்யவன்சியின் கண்களிலும் பார்க்க முடிந்தது.

குஜராத்தைப் பொறுத்தவரை பௌலிங்கில் பலர் சறுகினாலும், ஃபீல்டிங்கில் பல புள்ளிகளில் சொதப்பினாலும், ஒரு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு அவர்களை அழைத்துச் சென்று விட்டது.

எல்லா வகையிலும் தகுதிவாய்ந்த அணியாகவே தொடர் முழுவதும் பரிமளித்து வந்த குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சந்திப்பது தான் இறுதிப் போட்டியை சுவாரஸ்யமானதாக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com