‘கேட்ச் பிடிக்கையில் தவறி விழுந்த லுங்கி இங்கிடி; மைதானத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ்!’ – என்ன நடந்தது? | Lungi Ngidi Severe Injury

Share

இந்நிலையில், மூன்றாவது ஓவரை டெல்லியின் கேப்டன் அக்சர் படேல் வீசியிருந்தார். இந்த ஓவரில் ஒரு பந்தில் பிரியான்ஸ் ஆர்யா பெரிய ஷாட்டுக்கு முயன்றார். மிட் ஆபில் பீல்டிங் செய்து கொண்டிருந்த லுங்கி இங்கிடி பின்பக்கமாக ஓடிச் சென்று அந்த பந்தை கேட்ச் செய்ய முயன்றார். கேட்ச்சை தவற விட்ட அவர் பின்பக்கமாக தவறி விழுந்தார். அதில் அவரின் கழுத்தும் தலையும் மடங்கி பலத்த அடி வாங்கினர். மைதானத்திலேயே சுருண்டு படுத்த அவரை அணியின் பயிற்சியாளர்களும் மருத்துவர்களும் சோதித்துப் பார்த்தனர்.

அவருக்கு ஏற்பட்ட அடி தீவிரமாக இருக்கவே உடனடியாக மைதானத்துக்குள்ளேயே ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு ஸ்ட்ரெச்சரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இங்கிடிக்கு அடிபட்டதில் டெல்லி வீரர்கள் அதிர்ச்சியடையவே போட்டி 15 நிமிடங்களுக்கு தடைப்பட்டிருந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com