SRH Vs MI: 'எங்கள் ரசிகர்களுக்குக் கொண்டாடப் போதுமான வாய்ப்புகளை நாங்கள் தரவில்லை'- ஹர்திக் பாண்டியா

Share

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 29)  விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த  மும்பை  அணி, 20 ஓவர்களில் 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, மும்பை பந்துவீச்சாளர்களின் சவாலை முறியடித்து வெற்றியைப் பதிவு செய்தது.

SRH VS MI Match
SRH VS MI Match

இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “ஹைதராபாத் பேட்டர்கள் மிகச்சிறப்பான ஷாட்களை ஆடினார்கள், அதே சமயம் நாங்கள் சில மோசமான பந்துகளை வீசினோம்.

அது அவர்களுக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினாலும், அது வெற்றியைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை. பேட்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நிச்சயமாக 244 ரன்கள் என்பது ஒரு மிகப்பெரிய ஸ்கோர். பந்துவீச்சாளர்கள் இந்த இலக்கைத் தடுத்து நிறுத்துவார்கள் என்று நான் முழுமையாக நம்பினேன்.

ஆனால் இன்று எங்களால் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை பீல்டிங்கின் போது சில வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டோம், இருப்பினும் வீரர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரைப் போராடினார்கள்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

தோல்விக்காக எனது பந்துவீச்சாளர்களை மட்டும் நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன். எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்குக் கொண்டாடப் போதுமான வாய்ப்புகளை நாங்கள் இன்னும் தரவில்லை.

எதிரணி வீரர்கள் வரும்போது ரசிகர்கள் அவர்களைக் கொண்டாடுவது சற்று வருத்தமாக இருக்கிறது.

ரசிகர்களின் அன்பு மற்றும் நம்பிக்கையை மீண்டும் பெற நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி அவர்களை மகிழ்விக்க வேண்டும்,” என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com