MIvsRR: மும்பையை வீழ்த்தி கடைசி பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது ராஜஸ்தான்

Share

IPL 2026, RR Vs MI, ராஜஸ்தான் ராயல்ஸ்  Vs மும்பை இந்தியன்ஸ் , ஜோஃப்ரா ஆர்ச்சர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜோஃப்ரா ஆர்ச்சர்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இன்று (மே 24) வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் ராயல்ஸ் தடுமாறியபோதெல்லாம் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். பேட்டிங்கில் தன் அணி தடுமாறியபோது 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தவர், பந்துவீச்சின்போது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ,தேர்வாகி தன் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார் ஆர்ச்சர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com