DC vs RCB: "என்ன நடந்துச்சுன்னே புரியல…" – புலம்பும் டெல்லி கேப்டன் அக்சர் படேல்

Share

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்27) நடைபெற்ற பெங்களூரு vs டெல்லி அணிகளுக்கு இடையிலனா போட்டி ஒரு தலை போட்டியாக நடந்து முடிந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வெறும் 75 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆக, இந்த இலக்கை வெறும் 6.3 ஓவர்களில் எட்டிப் பிடித்து ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர் பெங்களூரு அணியினர்.

DC vs RCB
DC vs RCB

இந்தத் தோல்விக்குப் பின்னர் பேசிய டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல், “என்ன நடந்தது என்று எனக்கே புரியவில்லை. அதனால்தான் கிரிக்கெட்டில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இந்தப் போட்டியை மறந்து முன்னேற வேண்டும்.

இன்றைய பார்வையில் பார்க்கும்போது இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்த்தால், கேட்ச்களைப் பிடித்திருந்தோம் அல்லது குஜராத் எதிராக அந்த ஒரு ரன்னை எடுத்திருந்தோம் என்றால், மொமெண்டம் எங்களுடனே இருந்திருக்கும்.

இன்று ஒரு மோசமான நாள்தான், ஆனால் கடந்த 5-6 போட்டிகளில் இருந்த நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

DC vs RCB

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். எல்லா மைதானங்களிலும் ஸ்விங் செய்கிறார்கள். ஆனால் எங்கள் ஓப்பனர்கள் அல்லது டாப் ஆர்டர் அவர்கள் பந்துவீச்சைச் சமாளித்திருந்தால், முடிவு வேற மாதிரி இருந்திருக்கலாம்” என்று பேசியிருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com