2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக பும்ரா தேர்வு! | jasprit bumrah named icc test cricketer of the year
துபாய்: 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி. 31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பும்ரா கடந்த ஆண்டு விளையாடி இருந்தார். இதில் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். இது தவிர கடந்த ஆண்டில் 8 டி20 போட்டிகளில்…









