பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சென்னை போன்ற நகரங்களில், கோடைக்காலம் என்பது நீண்ட வெப்ப அலைகள், அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, தொடர்ச்சியான தண்ணீர் பற்றாக்குறை குறித்த அச்சங்கள் எனத் தீவிரமான நிகழ்வுகள் நிறைந்த ஒரு பருவமாக மாறி வருகிறது.தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ எனப்படும் ஒரு காலநிலை அமைப்பு உருவாகத் தொடங்கும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.வெகுதொலைவில் இருந்தாலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. இப்படிப்பட்ட…









