Mitchell Owen: 'அன்று ஹோபர்ட் ரசிகன்; இன்று அதே அணியின் சாம்பியன்' – Big Bash லீக்-ஐ அதிர வைத்த ஓவன்
ஆஸ்திரேலியாவின் பிரபலமான லீகான பிக்பேஸ் லீக் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னி தண்டர்ஸ் அணிக்கும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி சுலபமாக வென்று சாம்பியனாகியிருக்கிறது. மிட்செல் ஓவன் என்கிற வீரர் அதிரடியாக சதமடித்து ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் சாம்பியனாக காரணமாக இருந்தார். இந்த மிட்செல் ஓவன் ஹோபர்ட் அணியின் தீவிர ரசிகர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயதில் மைதானத்தில் ரசிகர்களோடு ரசிகராக ஓவன் ஹோபர்ட் அணிக்காக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் இப்போது…









