பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே ஒரு அடிதடி வழக்கில் சிக்கிய சந்தீப்பை 2023-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இரவு போலீஸார் கைதுசெய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மறுநாளான 10.05.2023 அன்று மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை…









