நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் என்ன நடந்தது?

Share

Neet, Students, Rahulgandhi

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத்தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் என்.டி.ஏ கூறியுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த மே 10-ஆம் தேதி வினாத்தாள் கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் இப்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இருப்பினும், இதற்காகத் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மோதி அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

“இது இப்போது ஒரு தேர்வாக இல்லை; நீட் என்பது ஒரு ஏலமாக மாறிவிட்டது,” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com