
மக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 106 இடங்களிலும் அதிமுக கூட்டணி 69 இடங்களிலும் திமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “தொங்கு சட்டப்பேரவை தான் வரும் என நினைக்கிறேன்.”
இந்த முடிவுகளை தான் ஒரு மௌன புரட்சியாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் முழுவீச்சில் பரப்புரை மேற்கொண்டும் இத்தகைய முடிவு வந்திருப்பது குறித்து பேசிய ஆர்.எஸ். பாரதி, “திமுக தன் கடமையை முழுமையாக செய்தது, மக்கள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர்.
இந்த முடிவுகளின் பின்னணி குறித்து இனிமேல் தான் ஆராய வேண்டும்.” என தெரிவித்தார்.