தமிழ்நாடு அரசு vs ஆளுநர்: 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்
பட மூலாதாரம், Getty Images8 ஏப்ரல் 2025, 07:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்…








