Vikatan Play Contest : இது ரோலர் கோஸ்டர் பயணம்! | கோட்டைப்புரத்து வீடு
வளையாம்பிகையின் சிசு மரணிக்கயில், நம்மையும் அறியாமல் கண்கள் கசியும்… வேங்கை பொன்னியின் ஆலயத்தில் வஞ்சியம்மா புலி வாய் அகப்பட்ட மானாய்த் தவிக்கையில் , நம்மையும் பதை பதைக்க வைக்கும் உயிரோட்டம் கொண்டது இந்த கோட்டைப்புரத்து வீடு..விசுவும் அர்ச்சனாவும் சேர்ந்து விட வேண்டுமே என்ற தவிப்பை , இந்தப் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவரின் மனத்தினுள்ளும் ஆழமாய் பதிய வைத்த ஆசியரின் திறமைக்கு “ஒரு சோறு பதம் ” தவிர வேறென்ன உவமை சொல்ல முடியும்?விஷ்ணு சித்தன் வழியாக உண்மையை…









