இங்கிலாந்துக்கெதிரான தொடர் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “தனிநபர்களைப் பற்றி பேசுவது மிகவும் கடினம். இருப்பினும், அவருக்கான (பண்ட்) நேரம் வரும்போது, வாய்ப்பு கிடைக்கும்போது அணியில் இடம்பிடிப்பார் என்று என்னால் கூற முடியும். ஆனால், இப்போதைக்கு விக்கெட் கீப்பர் இடத்துக்கு ராகுல்தான் நம்பர் ஓன் சாய்ஸ்.
அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களை நீங்கள் பெற்றிருக்கும்போது அவர்கள் இருவரையும் அதே தரத்துடன் நீங்கள் விளையாட வைக்க முடியாது. எனவே, பண்ட் வாய்ப்பு கிடைக்கும்போது அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். நாங்கள், ராகுல்தான் விளையாடப் போகிறார்.” என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் பிளெயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பது பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.