Browsing: விளையாட்டு

ராகுல், ரோகித்துடன் பிசிசிஐ ஆலோசனை நடத்துகிறது?

டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.டி20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63…

`Delivers When it Matters’ – ஓப்பனர்களின் சொதப்பலும் இந்திய அணியின் உலகக்கோப்பைத் தோல்விகளும்! | T20 WorldCup – Indian Openrs Continuous failure in WorldCup Knockouts

கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறியிருக்கவில்லை. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி அடைந்திருந்தனர். அந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் ஷாகீன் ஷா விடம் சிக்கி சின்னாபின்னமாகி தோல்விக்கு வழிவகுத்திருந்தனர். அதே 2021 இல் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் நடந்திருந்தது. அதிலும் இந்திய அணி நியுசிலாந்திடம் தோற்றிருந்தது.முக்கியமான போட்டி ஒன்றில் ஓப்பனர்கள் சரியாக ஆடிக் கொடுக்கும் போது அது அணிக்கே ஒரு மிகப்பெரிய பாசிட்டிவிட்டியை…

T20 WC அரையிறுதி | தேறாத சுழல்… 42 டாட் பந்துகள்… – இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் | T20 WC Semi Final | Reasons for Team Indias Defeat

அடிலெய்டு: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது அதிரடியால் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று அடிலெய்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில்…

எங்கு கோட்டைவிட்டோம்… தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் நன்றி

IND v ENG: ஏமாற்றம் மட்டுமே தொடர்கதை; இங்கிலாந்திடம் சரணாகதி அடைந்த இந்தியா; காரணம் என்ன?

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, “இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை காண எங்களுக்கு விருப்பமில்லை. அதை அத்தனை சுலபமாக நிகழவிடமாட்டோம்” என்பது போலப் பேசியிருந்தார். பேசியதோடு மட்டுமல்லாமல் அதை செய்தும் காண்பித்திருக்கிறது ஜாஸ் பட்லர் & கோ. இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையின் நாக் அவுட்டில் வந்து சொதப்பியிருக்கிறது. மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? இந்திய அணி எங்கே சொதப்பியது?IND vs ENGஇந்திய அணி முதலில் பேட்டிங்…

மிஸ் யூ கேப்டன் தோனி! – இந்திய அணியின் T20 WC அரையிறுதி தோல்விக்கு பிறகு ரசிகர்கள் ரியாக்‌ஷன் | we miss captain ms dhoni fans pay tribute after india exit from t20 wc semi

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி உள்ளது. அதையடுத்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகம், பிசிசிஐ மற்றும் சோபிக்காத வீரர்களை காட்டமாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலரோ ‘இந்நேரம் தோனி மட்டும் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?’ என முன்னாள் கேப்டன் தோனியின் புகழை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக்…

இந்திய அணி மோசமான பவுலிங்; இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடிலெய்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா…

INDvENG: கோலியும் சூர்யாவும் மட்டுமே போதுமா? அதிரடி இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவின் வியூகம் என்ன?

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணி இன்று அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. பரபரப்பாக நடைபெறப்போகும் இந்தப் போட்டியில் வென்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? அவை பற்றிய ஒரு சிறு அலசல் இங்கே..இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாகவே ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர்களில் முக்கியமான கட்டத்தில் சொதப்பியிருக்கிறது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியை தோனி தலைமையில் இந்தியா வென்றிருந்தது. அதன்பிறகு, எல்லாமே சறுக்கல்தான்.…

T20 WC | இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுவது யார்? – 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை

அடிலெய்டு: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் சிறந்த பார்மில் உள்ளனர். விராட் கோலி 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 246 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில்…

Ind vs Eng | இந்திய அணியின் பலம் , பலவீனம் என்ன ? ஒர் விரிவான அலசல்

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதில் இந்திய அணி – இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் களைகட்டவுள்ளது.நடப்பு தொடரில் இதே மைதானத்தில் இந்திய அணி – வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் முறையாக விளையாடவுள்ளது. இந்திய அணியில் ரோஹித் இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு விடைகிடைத்துள்ளது. பயிற்சியின் போது…

1 348 349 350 351 352 444