FIFA WORLD CUP 2022: `ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் ஆசிய அணிகள்'; வலுவான ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மற்றுமொரு அப்செட் நேற்று நிகழ்ந்திருக்கிறது. ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வென்றிருக்கிறது.குரூப் ஈ பிரிவை சேர்ந்த ஜெர்மனியும் ஜப்பானும் நேற்றிரவு கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியன் மற்றும் உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜெர்மனியின் முதல் போட்டி என்பதால், கால்பந்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் போட்டியினை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். போட்டி ஆரம்பித்தில்…








