Browsing: விளையாட்டு

பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

தமிழ் நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர்…

"அவரைப் போல் விளையாடுவதையே கனவாகக் கொண்டிருந்தேன்!"- பாபர் அசாமின் ரோல் மாடல் யார் தெரியுமா?

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளதால் இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்தாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்நேர்காணலில் பேசிய பாபர் அசாம், “19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்ட நான், பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் அப்போது எதிர்பார்த்த அளவுக்கு என்னால்…

FIFA WC 2022 அலசல் | அணியில் செய்த மாற்றங்களால் வென்ற இங்கிலாந்து – அடுத்தச் சுற்றிலாவது மந்தப்போக்கை கைவிடுமா? | England vs Wales FIFA World Cup 2022 Highlights

கத்தாரில் நடைபெறும் 2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. நள்ளிரவு நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்று அபார வெற்றி பெற்றதன் காரணம், பயிற்சியாளர் சவுத்கேட் செய்த மாற்றங்களினால்தான் என்றால் மிகையல்ல. இடைவேளை வரை இங்கிலாந்து பாஸிங், ட்ரிப்ளிங்கில் மந்தமாக இருந்ததால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், இடைவேளைக்குப்பிறகுதான் சவுத் கேட் அணியில் கொண்டு வந்த மாற்றங்கள் மிகச் சரியாக வேலை செய்தது. மார்கஸ்…

நியூசிலாந்தின் கோட்டையில் இந்தியா.. குறுக்கிடாத மழை.. வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழக்காமல் இருக்க, மூன்றாவது ஒரு நாள் போட்டியில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறதுநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதலில் நடைபெற்ற டி-20 தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. பின்னர், ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து…

FIFA WC 2022 | ஈக்வேடாரை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது செனகல்

அல் ரய்யான்: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியில் செனகல் மற்றும் ஈக்வேடார் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஈக்வேடார் அணிக்கு இருந்தது. ஆனால் அதனை தடுத்து தவிடு பொடியாக்கியது செனகல் அணி. குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன. முதல் பாதியின் கடைசி நொடிகளில்…

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு.. கால்பந்து மைதானத்துக்குள் வானவில் கொடியுடன் ஓடிய இளைஞர்!

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (குயர் சமூகத்தினர்) ஆதரவாக வானவில் கொடியை ஏந்தி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போர்சுகல் உருகுவே அணிகள் களம் கண்டன. முதல் பாதியில் இருவரும் கோல் அடிக்காத நிலையில் 2ஆம் பாதியில் போர்சுகல் அணி கோல் அடித்து வெற்றியை கைப்பற்றியது.இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில்,…

FIFA WC 2022 | அது ப்ரூனோவின் கோல்… ரொனால்டோவுக்கு தொடர்பு இல்லை: சென்சார் மூலம் அடிடாஸ் உறுதி | fifa wc it was bruno s goal ronaldo had no contact adidas confirmed with sensor

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் முதல் கோலை பதிவு செய்தது யார் என்ற விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அடிடாஸ் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது. ஒருபக்கம் ரொனால்டோ கோல் போட்டதாக கொண்டாடித் தீர்த்தார். மறுபக்கம் அது ப்ரூனோ பதிவு செய்த கோல் என நடுவர்கள் தீர்ப்பு வழங்கினர். ‘ஹேர்…

கால்பந்தில் கலக்கும் தெருவோரக் குழந்தைகள்.. கத்தார் வரை சென்று கலக்கிய சென்னை வீராங்கனைகள்!

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.உலகின் உச்சபட்ச விளையாட்டு திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.தாய் தந்தையரை இழந்த, வீடற்ற குழந்தைகளின்…

“என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!”- பென் ஸ்டோக்ஸ் | Ben Stokes to donate match fees from Pakistan Test series to flood victims

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த முழு டெஸ்ட் தொடருக்கான தனது ஊதியத் தொகையைப் பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்குத் தருவதாகக் கூறியுள்ளார்.இது பற்றி அவரது ட்விட்டர் பதிவில், “17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் பாகிஸ்தான் வருவது உற்சாகமாக இருக்கிறது. இந்த வருடம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் நாட்டையும், நாட்டு மக்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறையக் கொடுத்துள்ளது. அதற்குக் கைமாறாக கிரிக்கெட்டைத் தாண்டி பிற…

FIFA WC 2022 | ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது பிரேசில்: சுவிட்சர்லாந்தை 1-0 என வீழ்த்தியது | fifa wc 2022 brazil advance to round of 16 beats switzerland casemiro

தோகா: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறி உள்ளது பிரேசில் அணி. குரூப் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்தது. சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது அந்த அணி. குரூப் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் களத்தில் பலமாக போட்டி போட்டன. பிரேசில் அணி கோல் போடுவதில் மிகவும்…

1 339 340 341 342 343 444