Browsing: விளையாட்டு

WTC Final : பயிற்சியின்போது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம்… நாளைய போட்டியில் இடம்பெறுவாரா?

ரோஹித்தின் காயம் தொடர்பாக பிசிசிஐ எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் நாளை அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நன்றி

“ IPL -ல் பணம் நிறைய கிடைக்கும்தான், ஆனால் நான் நாட்டுக்காகத்தான் விளையாடுவேன்”- மிட்செல் ஸ்டார்க் |Mitchell Starc comments on skipping IPL

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். அதன்பின் 2018 ஐபிஎல் ஏலத்தின்போது ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த முறை ஒரு போட்டியில் கூட  அவர் விளையாடவில்லை. அதன்பின் நடைபெற்ற எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கவில்லை. தொடர்ந்து ஐபிஎல்லை தவிர்த்து வருகிறார்.       மிட்செல் ஸ்டார்க் இந்நிலையில் ஐபிஎல்-லில் ஏன் விளையாடுவதில்லை என்பது  குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசியிருக்கிறார். இதுகுறித்துப்…

பிரண்டன் கிங் விளாசலில் மே.இ.தீவுகள் அணி வெற்றி | Brandon King brilliant knock wins for west indies in odi

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 47.1 ஓவரில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அலி நசீர் 58, விருத்தியா அரவிந்த் 40 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்களை வீழ்த்தினார். டோமினிக் டிரேக்ஸ், ஒடியன்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரலையில் பார்ப்பது எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில் அதனை நேரலையில் பார்ப்பது குறித்து இந்த பதிவில் காணலாம். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி…

Love Jihad: கிரிக்கெட்டர் யாஷ் தயாளின் இஸ்லாமிய வெறுப்புக்கு எழுந்த கடும் கண்டனங்கள் – நடந்தது என்ன? | Yash Dayal faces heavy criticism over ‘Love Jihad’ Instagram post

அப்போது அந்த ஓவரை யாஷ் தயாள் வீச, கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார் ரிங்கு சிங். இதன் காரணமாக யாஷ் தயாளை அடுத்தடுத்தப் போட்டிகளில் களமிறக்கவில்லை குஜராத் அணி. அவரும் உடல்நலப் பாதிப்பால் சில போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். அப்போது யாஷ் தயாளுக்கு ஆதரவாகப் பலரும் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும்…

WTC Final | நேரலையில் தொலைக்காட்சி, ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் | WTC Final match will be telecast live on TV streaming platform by Star Network

சென்னை: வரும் புதன்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி மதியம் 3 மணி அளவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடரை வென்று சுமார் 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருநாள்…

”விளையாட்டில் உன் கவனம் இருக்க வேண்டும்”

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களம் கண்டார். இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் மொத்தம் 9.5 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் தனது மகன் அர்ஜுன் குறித்து சச்சின் ஒரு சுவாரஸ்சிய கருத்தை பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் “Scintillating Sachin” என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் தனது குடும்பம் பற்றியும்…

"இந்திய அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு தேவை!"- ரிக்கி பாண்டிங் குறிப்பிடும் அந்த வீரர் யார்?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற ஜூன் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன், இந்திய அணி மோத இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி, இந்த முறை எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரிக்கி பாண்டிங் இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முகமது சமியின்…

மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனையை கரம் பிடித்தார் ருத்துராஜ் | CSK Star Ruturaj Gaikwad Marries Utkarsha Pawar

மும்பை: சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் திருமணம் கோலாகலமாக நடந்தது. உத்கர்ஷா பவார் என்பவரை ருத்துராஜ் இன்று (ஜூன் 4) மணந்தார். உத்கர்ஷா பவார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஆவார். திருமணத்தைத் தொடர்ந்து, புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருத்துராஜ் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ருத்துராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். திருமண நிகழ்வில் ஷிவம் துபே உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைதள…

பி.எஸ்.ஜி. அணியில் இருந்து லயோனல் மெஸ்ஸி வெளியேற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தான் இணையவுள்ள புதிய அணி குறித்த அறிவிப்பை மெஸ்ஸி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில ரசிகர்கள் உள்ளனர். நடந்த முடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி முக்கிய காரணமாக இருந்தார். உலகக்கோப்பைக்கு முன்னரே புகழின் உச்சியில் இருந்த மெஸ்ஸிக்கு, இந்த…

1 252 253 254 255 256 445