Browsing: விளையாட்டு

பாரம்பரிய உடையில் ருதுராஜ் கெய்க்வாட் – உட்கர்ஷா ஜோடி… கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்…

பாரம்பரிய உடையில் சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன ருதுராஜ் மற்றும் அவரது மனைவி உட்கர்ஷா ஜோடி ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். நன்றி

WTC Final: "ரோஹித்தும் புஜாராவும் அவர்களை அவர்களே திட்டிக்கொள்வார்கள். காரணம்…" – ரவி சாஸ்திரி

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தோல்வி குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.ரவி சாஸ்திரிஇது குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, “ஐ.பி.எல் முடிந்த சிறிது நாள்களிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிவிட்டது. இதுபோன்ற சிக்கல்கள் இருந்தால் இந்திய அணி ஒருபோதும் வெல்ல…

பிளேயிங் 11-ல் அஸ்வின் இடம்பெறாததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை: சச்சின் விமர்சனம் | I fail to understand the exclusion of ashwin in the playing XI

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11-ல் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சச்சின், ரவி சாஸ்த்ரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட்டர்கள் மத்தியில்…

அக்.15-ல் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்? – உலகக்கோப்பை வரைவு அட்டவணை வெளியீடு…

உலகக்கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி  தோல்வியடைந்துள்ளன நிலையில், அடுத்ததாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை எதிர்நோக்கியுள்ளது. ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்று 10 ஆண்டுகள் ஆகின்றன.இதனால் உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

Dhoni: ‘உலகக்கோப்பையை ஜெயிச்சதுக்கு தோனி மட்டும் காரணமில்ல..’ – ஆதங்கத்தை கொட்டிய ஹர்பஜன் சிங்!| WTC Finals : Harbhajan Singh’s tweet about Dhoni

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. இதன் மூலம் 2013 க்குப் பிறகு இந்திய அணி ஐ.சி.சி கோப்பைகளை வெல்லவே இல்லை என்கிற சோக வரலாறும் தொடர்கிறது. இந்நிலையில், சமூகவலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் தோனியை புகழ்ந்து எழுதி வருகின்றனர். 2007 உலகக்கோப்பை வெற்றியைக் குறிப்பிட்டு, ‘அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட இல்லை. அனுபவ வீரர்கள் ஆடுவதற்கே முன் வரவில்லை. அப்படி ஒரு சூழலில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே கொண்டு…

வெற்றிப் பயணம் தொடரும் – இகா ஸ்வியாடெக் நம்பிக்கை | Success journey will continue – Iga Swiatek believes

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றுள்ள போலந்து டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தனது வெற்றிப்பயணம் தொடரும் என்று அறிவித்துள்ளார். பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், செக்.குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவாவும் மோதினர். இதில் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக்…

ஐசிசியின் 4 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி…

ஐசிசியின் அனைத்து பிரிவு போட்டிகளின் கோப்பைகளையும் வென்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ள ஒரே அணியாக மாறியுள்ளது ஆஸ்திரேலியா. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 270 ரன்களும் எடுத்தது.இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296…

Ashwin: `அஷ்வின் எங்கே?’ | WTC Finals – Ind Vs Aus Sachin Tendulkar Criticizes Ashwin’s exclusion from team

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல முன்னாள் இந்திய அணி வீரர்களும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.Sachin Tendulkar – சச்சின் டெண்டுல்கர்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி ட்வீட் செய்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்டீவ் ஸ்மித்தும் ட்ராவிஸ் ஹெட்டும் முதல் நாளிலேயே ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாற்றும் வகையிலான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டனர்.…

‘படுமோசமான ஷாட்’- கோலியின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட ஸ்டீவ் ஸ்மித் | Steve Smith accepts Kohli criticism

ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4ம் நாள் ஆட்டமான நேற்று காலையில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்ஸில் அடித்து அவுட் ஆன ஷாட்டை ‘மிக மோசமான ஷாட்’ என்று அவரிடமே கூறியதை வர்ணனையாளர் ஜஸ்டின் லாங்கர் ஒட்டுக் கேட்டு அதை வெளிப்படுத்தினார். 4ம் நாள் ஆட்டம் முடிவில் ஷுப்மன் கில் கேட்ச் சர்ச்சையால் அவரை ‘ஏமாற்றுக்காரா’ என்று இந்திய ரசிகர்கள் ஏசினர். இதனிடையில் ‘மேஜிக் கணம்’ என்று ஜஸ்டின் லாங்கர்…

வரலாறு படைக்குமா இந்திய அணி? உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் கடைசிநாள் ஆட்டம் இன்று…

உலக டெஸ்ட் சாம்பியனுக்கான போட்டியில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய வரலாறை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 280 ரன்களும், ஆஸ்திரேலிய  அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன. 444 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி நேற்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள்…

1 249 250 251 252 253 445