ஐசிசியின் 4 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி…

Share

ஐசிசியின் அனைத்து பிரிவு போட்டிகளின் கோப்பைகளையும் வென்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ள ஒரே அணியாக மாறியுள்ளது ஆஸ்திரேலியா. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 270 ரன்களும் எடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

இன்று கூடுதலாக 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். களத்தில் விராட் கோலி, ரஹானே உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் அடுத்தடுத்து, விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.

இந்த வெற்றியின் மூலம், ஐசிசியின் ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 4 கோப்பைகளையும் வென்ற அணியாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com