அக்.15-ல் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்? – உலகக்கோப்பை வரைவு அட்டவணை வெளியீடு…

Share

உலகக்கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி  தோல்வியடைந்துள்ளன நிலையில், அடுத்ததாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை எதிர்நோக்கியுள்ளது. ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்று 10 ஆண்டுகள் ஆகின்றன.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து இந்திய அணி வீரர்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில் ESPN Cric info தளம் வெளியிட்டுள்ள தகவலில், உலகக்கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் பின்வருமாறு-

அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா, சென்னை

அக்டோபர் 11: இந்தியா vs ஆப்கானிஸ்தான், டெல்லி

அக்டோபர் 15: இந்தியா vs பாகிஸ்தான், அகமதாபாத்

அக்டோபர் 19: இந்தியா vs பங்களாதேஷ், புனே

அக்டோபர் 22: இந்தியா vs நியூசிலாந்து, தர்மசாலா

அக்டோபர் 29: இந்தியா vs இங்கிலாந்து, லக்னோ

நவம்பர் 2: இந்தியா vs குவாலிஃபையர், மும்பை

நவம்பர் 5: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, கொல்கத்தா

நவம்பர் 11: இந்தியா vs குவாலிஃபையர், பெங்களூரு

இதையும் படிங்க – சுப்மன் கில்லுக்கு பில்லு போட்ட ஐசிசி…கோப்பையை இழந்தது இல்லாமல் பணத்தையும் இழந்த இந்திய அணி!..

இது வரைவு அட்டவணையாக கருதப்பட்டாலும் இறுதி அட்டவணையில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி மோதும் ஆட்டங்கள் குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அக்டோபர் 5 ஆம்தேதி தொடங்கவுள்ளளன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com