Browsing: விளையாட்டு

21-ம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்! | Pakistan victory over South Africa – A record in 21-st century Asian cricket

தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 3-வது போட்டி நாளை (டிச.22) நடைபெறும் நிலையில், 21-ம் நூற்றாண்டில் எந்த அணியும் செய்யாத ஒரு சாதனையை பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் செய்துள்ளது. கேப்டவுனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் (73), கேப்டன் ரிஸ்வான் (80), கம்ரன் குலாம் (63) என்று 329 ரன்களைக் குவிக்க, தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசன் 97…

Ashwin: `மெல்போர்னில் சேர்ந்து பேட்டிங் ஆட வருவேன்!' – கோலியின் வாழ்த்தும், அஷ்வினின் பதிலும்!

அனைத்து விதமான ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஷ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஷ்வினுக்கு விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் “14 ஆண்டுகள் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து சென்றன. அஷ்வினுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் இனிமையானவை. நீங்கள்…

இந்தியா – மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் 2 ஆட்டங்களில் மோதல் | India to host Maldives for two women international friendlies

இந்தியா – மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் நட்புரீதியிலான 2 சர்வதேச ஆட்டங்களில் மோத உள்ளன. இந்த ஆட்டம் வரும் 30-ம் தேதி மற்றும் ஜனவரி 2-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிஃபா கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணி 69-வது இடத்திலும், மாலத்தீவுகள் 163-வது இடத்திலும் உள்ளன. இந்திய கால்பந்து அணி கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து மகளிர் சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தது. இந்த…

Ashwin: “துப்பாக்கிய புடிங்க வாஷி!” – வாஷிங்டன் சுந்தருக்கு அஷ்வினின் ரீ-போஸ்ட் | TN cricket players washington sundar and ashwin makes fun in X platform

அந்த வரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த சக வீரர் வாஷிங்டன் சுந்தர், எக்ஸ் தளத்தில் அஷ்வினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒரு சக வீரர் என்பதைத் தாண்டி, நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன், வழிகாட்டி மற்றும் உண்மையான சாம்பியன். மைதானம், டிரெஸ்ஸிங் ரூமை உங்களுடன் பகிர்ந்ததில் பெருமை. ஒரே மாநிலத்திலிருந்து வந்து, சேப்பாக்கத்தின் ஒரு மூலையில் இருந்து உங்களைப் பார்த்தது முதல் உங்களுக்கெதிராவும், உங்களுடனும் விளையாடி வளர்ந்திருக்கிறேன்.அந்த ஒவ்வொரு கணமும் எனக்குக் கிடைத்த பாக்கியம். களத்துக்குள்ளேயும், களத்துக்கு வெளியேயும் உங்களிடமிருந்து…

‘அஸ்வினின் அயலக செயல்பாடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது’ – புஜாரா கருத்து | Ashwin s overseas performance is underrated says Pujara

பிரிஸ்பன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வினின் அயலக செயல்பாடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். இத்தொடரின் முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இரண்டாவது போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் அஸ்வின் வாய்ப்பு பெற்றார். இந்நிலையில், தொடரின் பாதியிலேயே அவர்…

Virat Kohli: `விராட் விரைவில் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு…' – கோலியின் முன்னாள் பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சமீபகால ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு அந்த ஃபார்மெட்டில் மட்டும் ஒய்வை அறிவித்தார் விராட் கோலி. அதன்பின், 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது போன்ற வரலாற்றுத் தோல்விகளில் சீனியர் வீரர் என்ற முறையில் கடும் விமர்சனத்துக்குள்ளானார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் மூன்று டெஸ்ட்டுகளில்…

ஜேஎஸ்கே டி20 கிரிக்கெட் தொடர்: டிசம்பர் 26-ல் தொடக்கம் | jsk t20 cricket series starts on december 26

சென்னை: ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை ஈக்விடாஸ் நிறுவனம் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் தமிழகம் மற்றும் கோவா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 23 மாவட்டங்களில் இருந்து 108 பள்ளிகள் பங்கேற்கின்றன. ஜேஎஸ்கே டி20 தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட போட்டி வரும் 26-ம் தேதி…

Ashwin : “அஷ்வின் அவமானப்படுத்தப்பட்டார்"- தந்தையின் குற்றச்சாட்டும் அஷ்வினின் விளக்கமும்

சமீபத்தில் அத்தனை விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தமிழக வீரர் அஷ்வின் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவரின் தந்தை ரவிச்சந்திரன், ‘அஷ்வின் அவமானப்படுத்தப்பட்டார்.’ எனப் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.அஷ்வின்நியூஸ் 18 ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கும் அவர், “எனக்கும் கடைசி நிமிடத்தில்தான் அவரின் ஓய்வு முடிவு பற்றித் தெரியும். அவரின் ஓய்வு முடிவை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் சோகமாகவும் இருக்கிறது. அவர் இன்னும் சில காலங்களுக்கு ஆடியிருக்க வேண்டும். ஆனால்,…

“அஸ்வின் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை” – பத்ரிநாத் வருத்தம் | Ashwin was not treated fairly Badrinath comments

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின். இந்நிலையில், அவரது ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், தனது கருத்தை தெரிவித்துள்ளார். “அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அவரை அணி நிர்வாகம் நியாமான முறையில் நடத்தவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியின் போதே ‘நான் போறேன்’ என அவர் சொல்லியதாக ரோஹித் தெரிவித்தார். முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை…

Champions Trophy: இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC புதிய அறிவிப்பு; விரைவில் போட்டி அட்டவணை! | icc big announcement about india pakistan in upcoming icc events

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அங்கு செல்ல மறுப்பதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தும் நெருக்கடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) உருவானது. இதனால், போட்டி அட்டவணையை ICC இன்னமும் வெளியிடவில்லை.மறுபக்கம், இந்தியா தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று கூறிவந்த பாகிஸ்தான், அவர்கள் வரவில்லையென்றால், நாங்களும் இந்தியாவில் ஆட மாட்டோம். இந்தியாவில் நடைபெறும் ICC தொடர்களில் எங்களின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த…