Browsing: அரசியல்

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலன் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்’ என்று கூறியுள்ளார். Source link

நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பணியாளர்கள் பணி நீக்கம் தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. தொழிலாளர் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981ன் படி 2 ஆண்டுகளில் 48 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்படி 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 250 பேரும் பணி நிலைப்பு…

தேவரின் தங்கக்கவசம் எடுக்க ஓபிஎஸ் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும்: வங்கி அதிகாரிகளிடம் ஓபிஎஸ் அணியினர் மனு

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தங்கக் கவசத்தை எடுக்க ஓபிஎஸ் கையெழுத்து போட அனுமதிக்கவேண்டும் என ஓபிஎஸ் அணியினர் வங்கி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால், கடந்த ஜூலை 11ல் பொதுக்குழு நடந்தது. இதில், பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். எனவே, கட்சி வரவு – செலவுகளை இவரே கவனிப்பாரென எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை…

திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ப்பில் வள்ளலார் முப்பெரும் விழா தொடங்கியது. வள்ளலார் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் வள்ளலார்-200 இலச்சினை, தபால் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார். இதனை தொடர்ந்து வள்ளலார் முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; வள்ளலார் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகிறது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. ரூ.100 கோடியில் விரைவில் வள்ளலார் சர்வதேச…

தமிழகம் முழுவதும் 28 பள்ளிகளை ரூ.170 கோடியில் தகைசால் பள்ளியாக்கும் பணி தீவிரம்: ஆசிரியர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சி

வேலூர்: தமிழகம் முழுவதும் 28 அரசுப்பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளை பார்வையிட்டார். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவர் அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த மாதம் 5ம் தேதி தமிழகம் வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி,…

வானொலிகள் மூலம் இந்தி திணிப்பு கைவிடாவிட்டால் கண்டித்து போராட்டம்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: வானொலிகள் மூலம் இந்தி மொழியை திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசை ராமதாஸ் எச்சரித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே…

பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும்: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரன் மிரட்டல்

சென்னை: பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரன் மிரட்டல் விடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அனுமதியளித்தல் ரகசியத்தை பகிரங்கப்படுத்த தயார் என ஜே.சி.டி.பிரபாகரன் கூறியுள்ளார். நவம்பர் 21-க்கு முன்பாகவே பகிரங்கப்படுத்த உள்ளதாக ஜே.சி.டி.பிரபாகரன் பேசியுள்ளார். Source link

மழையினால் குறுவை நெல் பயிர்கள் சேதம் ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: மழையினால் குறுவை நெல் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளதால், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குறுவை நெல் சாகுபடி செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.…

தூய்மையில் சிறந்த நாடு என்ற சிறப்பினை தமிழ்நாடு பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்.  இதன்மூலம் சுகாதார கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும்.  இதன்மூலம், மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழியாத வகையில் உடனுக்குடன் அதில் உள்ள குப்பைகளை எடுக்கவும், தூய்மையின்மையால் வரும்…

சொல்லிட்டாங்க…

* பாஜவை எதிர்கொள்ள மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய காங்கிரஸ் தேவை. காங்கிரஸ் தலைவருக்கான வேட்பாளர் சசி தரூர்.* அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* மோடியின் கொள்கைகளால் நாட்டின் 100 பெரிய குடும்பங்களின் செல்வம் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்* அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது…

1 84 85 86 87 88 161