Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* நாட்டின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் தேச விரோத நடவடிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா* மூன்று ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகே டெல்லி அரசிடமிருந்து லோக் ஆயுக்தா அறிக்கைகள் கிடைத்துள்ளது. – டெல்லி ஆளுநர் சக்சேனா.* அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. – மத்திய இணையமைச்சர் எல். முருகன்* கர்நாடக காவல் துறையில் ஆட்சேர்ப்பு ஊழல் இல்லாமல் நடைபெற வேண்டும். – கர்நாடக…

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியல்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு வட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட நிர்வாகிகள் மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் மாவட்டம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். அதாவது பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், துறைமுகம், அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை,…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் எடப்பாடி உட்பட 17 பேரை கைது செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாக பார்க்கப்படுகிறது. இது குறித்து உளவுத்துறை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, அன்றைய முதல்வர் எடப்பாடி, ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், ஐபிஎஸ் அதிகாரிகள், கலெக்டர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பேர் மீதும் துறை…

திமுக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் விபரம்

சென்னை: திமுக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர  கழகங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு (திமுக) மாவட்டத்தில் சங்கரன் கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். தேங்காய் வடக்கில் சங்கரன்கோவில்(3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றியங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக(சஸ்பெண்ட்) நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையை கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். Source link

ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார்? எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் தாக்கு

மதுரை: ‘மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்று அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்’ என்று எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் தாக்கிப் பேசினார்.சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:தேவர் தங்கக் கவசத்தை பொருத்தமட்டில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தின் கருத்து அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்கு போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என ஓபிஎஸ் அணி அறிவிப்பு: நிரூபிக்காவிட்டால் எடப்பாடி ஓய்வெடுக்க கோரிக்கை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும், அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜெசிடி.பிரபாகர் அறிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெசிடி.பிரபாகர், பி.எச்.பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் கூட்டாக நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள்…

காப்பீட்டு நிறுவனங்களிடம் உழவர்களுக்கு அதிக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:சம்பா பருவத்தில் நெற்பயிர் மற்றும் சிறப்புப் பயிர்களுக்காக தமிழக அரசின் சார்பில் காப்பீட்டுக் கட்டண மானியமாக செலுத்தப்பட்ட தொகை மட்டும் ரூ.1,338.89 கோடி. உழவர்கள் சார்பில் பிரீமியமாக செலுத்தப்பட்ட தொகை சுமார் ரூ.225 கோடி. ஒட்டுமொத்தமாக உழவர்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் பிரீமியமாக ரூ.1,500 கோடிக்கும் கூடுதலாக வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.481 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.உழவர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு…

சொல்லிட்டாங்க…

* தமிழக முதல்வரை சந்தித்ததை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலக தயார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்* தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவில் போதுமான போலீசாரை நியமித்து போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். பாமக தலைவர் அன்புமணி* தேர்தல் குழுவின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டுகிறார் சசிதரூர். காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி* எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத் துறைக்கு ஒரு பொற்காலம்.…

1 76 77 78 79 80 161