துணைவேந்தர் பதவி விவகாரம் தமிழக அரசு விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை: பஞ்சாப் ஆளுநர் புகாரை தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன் பேச்சில், ‘‘தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூபாய் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு…









