Browsing: அரசியல்

பாஜ சார்பில் இன்று தமிழை காக்கும் போராட்டம்

சென்னை: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது. கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார். தமிழக பாஜ சார்பாக ‘தமிழை காக்கும் போராட்டம்’ என்ற தலைப்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. இதற்கான போராட்ட அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட பாஜ தலைவர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெற உள்ளது. கடலூரில்…

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் 12 பேரை தேர்வு செய்ய விரைவில் தேர்தல்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் 12 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை விரைவில் நடத்தி மொத்தம் உள்ள 24 உறுப்பினர்கள் பட்டியலை இன்னும் ஒரு மாதத்துக்குள் வெளியிட அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இப்பதவிகளுக்கு புதிய நபர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி, புதிய காங்கிரஸ்…

சொல்லிட்டாங்க…

* தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். – பிரதமர் நரேந்திர மோடி* அதிமுக ஆட்சிக் காலத்தில் பட்டியல் சமூகத்தினர் உயர்கல்வியில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழ்நாடு மக்களை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* பஞ்சாயத்து தேர்தலில் எங்களது பெரிய வெற்றி எதிர்க்கட்சியினரை பீதி அடையச் செய்துள்ளது. – மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே Source link

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும்-திருப்பதியில் முன்னாள் அமைச்சர் பேச்சு

திருப்பதி :   எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அனில் குமார் பேசினார்.திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சித் தலைவரும், சந்திரகிரி எம்எல்ஏவுமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி தலைமையில், எம்.எல்.சி., தேர்தலுக்கு கட்சித் தலைவர்களை தயார்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அனில்குமார் பேசுகையில், சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி ஆகியோர் பட்டதாரி எம்எல்சி…

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுக்கொண்டார்: தலைவர்கள் பங்கேற்பு..

டெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பெற்றுக்கொண்டார். தலைவர் தேர்தலில் வெற்றி பெட்ரா மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சான்றிதழ் வழங்கினார் தேர்தல் கமிட்டி தலைவர் மிஸ்திரி. பதவியேற்பு விழாவில்  சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். Source link

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்படைக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 21ம் தேதி இரவு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், இந்திய கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தி மொழியில் பேச…

கோவை கார் வெடிப்பில் இறந்த நபர் தன் குற்றங்களை மன்னிக்க வாட்ஸ் அப்பில் கேட்டுள்ளார்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு காரிலிருந்த சிலிண்டர் வெடித்தது. அதன்பிறகு தமிழக டிஜிபி கோவை சென்றார். பின்னர், சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக டிஜிபி கூறினார். இதில் உண்மையை சொல்ல வேண்டிய கடமை பாஜவுக்கு உள்ளது.இலங்கையில்269 பேர்பலியான சம்பவத்தில்  ஜமேசா முபினிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அக்.23 விபத்திலும் காரை…

சொல்லிட்டாங்க…

* தமிழகத்தில் நான் பணியாற்றிய அதிமுக ஆட்சிக் காலத்தின்போது, துணைவேந்தர்கள் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்கப்பட்டது. – பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்* 8 ஆண்டு பாஜ ஆட்சியில், கோடீஸ்வரர்களின் ரூ.11 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. – மார்க்சிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி* ஹெல்மெட் அணிய வேண்டாம், ஓட்டுனர் உரிமம் தேவையில்லை, போக்குவரத்து விதிமீறினாலும் அபராதம் செலுத்த வேண்டாம். – குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ்…

தலித் பெண்ணின் கன்னத்தில் பளார் அமைச்சர் சோமண்ணாவுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு : தலித் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அமைச்சர் சோமண்ணா பதவி விலக வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா, நேற்று முன்தினம் சாம்ராஜநகர் மாவட்டம், குண்டல்பேட்டை தாலுகா, ஹங்கல கிராமத்தில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மனு ெகாடுக்க வந்த தலித் பெண் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் மீடியாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.  அமைச்சருக்கு எதிராக…

பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர் காப்பீட்டுத் தொகை: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர் காப்பீடு தொகை செலுத்தப்படவில்லை. மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் தருவதாகச் சொன்ன 481 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையும் போதுமானதாக இல்லை. காப்பீட்டு நிறுவனங்கள் அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 2021 ம் ஆண்டில் காப்பீடு செய்த நிலையில் அந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத்…

1 74 75 76 77 78 161