Browsing: அரசியல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர், படகுகளை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் 7 தமிழக மீனவர்கள் 27ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசைப்படகில் கடந்த 27ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற…

சொல்லிட்டாங்க…

* ஒரு போலி செய்தி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும். ஒரு செய்தியை ‘பார்வர்டு’ செய்யும் முன் அதுகுறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.- பிரதமர் மோடி* பிரதமர் மோடி மனசு வைத்தால்தான் ஓபிஎஸ் – இபிஎஸ் ஒன்று சேர முடியும். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்* கோவையில் நடந்த கார் வெடி விபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது மிகவும் ஆபத்தானது. -தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி* தினமும் பயணிகள் ரயிலை இயக்குவதால் ரயில்வே துறைக்கு எந்த லாபமும்…

ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜ ரூ.400 கோடி பேரம்; சாமியாருடன் டிஆர்எஸ் எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி வைரல்: தெலங்கானா அரசியலில் திடீர் திருப்பம்

திருமலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை ரூ.400 கோடிக்கு பாஜ பேரம் பேசிய விவகாரத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியாருடன் ஆளும் கட்சி எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோரை தனது கட்சிக்கு இழுக்க பாஜ பேரம் பேசியுள்ளது.ர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் இதற்கான சந்திப்பு நடந்துள்ளது.…

மோடி மனசு வைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் சேர முடியும்: டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சை: தஞ்சையில் இன்று டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: தமிழகத்தில் தமிழ் தான் தாய்மொழி. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மொழியையும் விரும்பி தான் ஏற்பார்கள். திணிப்பை விரும்ப மாட்டார்கள். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. ஒரு கட்சி தமிழகத்தில் வெற்றி பெற தான் நினைப்பார்கள்.1965 இந்தி திணிப்பு காரணத்தினால், காங்கிரஸ் ஆட்சி போனது. இதுவரை அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு இந்தி திணிப்புதான் காரணம். பிரதமர் மோடி மனசு…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம்

சென்னை: ஊடகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் 4-வது தூணை மதிக்கும் லட்சணமா இது?, பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்படுவதைவிட இக்கட்சிக்கு ஏற்படும் அவமானம் பற்றி யோசிக்க வேண்டாமா அவர்? என கேள்வி எழுப்பியுள்ளார். Source link

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது: திமுக செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம்

சென்னை: ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பாஜ தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை, ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று(நேற்று) மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேள்விகள் கேட்டபோது, மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், ஊடகத்தினரின் சுயமரியாதையை…

தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் மாவட்ட தலைநகரங்களில் பாஜவினர் ஆர்ப்பாட்டம்: கடலூரில் அண்ணாமலை பங்கேற்றார்

சென்னை: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜ சார்பாக மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூரில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ‘தமிழை காக்கும் போராட்டம்’ என்ற தலைப்பில் தமிழக பாஜ சார்பாக அக்டோபர் 27ம் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையை பொறுத்தவரை 7 இடங்களில் போராட்டம்…

தேவர் ஜெயந்தி விழா சசிகலா நேரில் மரியாதை

சென்னை: வி.கே.சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாள் மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 30ம் தேதி மதியம் 2 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு வி.கே.சசிகலா நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Source link

வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம்..! அபராத கட்டண உயர்வை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சென்னை: வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதாகவும், அபராத கட்டண உயர்வை கைவிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதமும் கடுமையாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் பயணம், ஒருவழிப்பாதையில் பயணம் உள்ளிட்ட அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் அபராதமாக…

ரிஷி சுனக்கிற்கு டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகள். ஒரு காலத்தில் உலகைக் கட்டி ஆண்ட நாடு, தற்போது நெருக்கடியை சந்திக்கும் நேரத்தில் அதன் பிரதமராகி இருக்கும் ரிஷி சாதனைகள் புரிந்து நம் அனைவருக்கும் பெருமை தேடித்தரட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். Source link

1 73 74 75 76 77 161