Browsing: அரசியல்

விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கணும்: அண்ணாமலை பேச்சு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு விவேகானந்தா நல்லோர் வட்டம் சார்பில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகத்தில் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகை மாற்றிக்காட்டுகிறேன் என்று பேசினார். அவர் பேசி 130 ஆண்டுகள் ஆனாலும் அவரது கனவு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  Source link

சட்டம் ஒழுங்கு விவகாரம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்தவர் பேசக்கூடாது: எடப்பாடி மீது புகழேந்தி தாக்கு

கோவை: ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்தேன் என கூறியவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக்கூடாது’ என எடப்பாடியை விமர்சித்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில் முதல்வர் கொடநாடு தொடர்பாக பேசினார். அப்போது எடப்பாடி தைரியமாக பதில் சொல்லாமல், அமைதியாக வெளியே சென்றுவிட்டார். தைரியமாக எனக்கும் வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறாமல் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல…

பின்னால் இருந்து இயக்கும் ஒன்றிய அரசு சங்பரிவார் வட்டாரமாக மாறும் கவர்னர் மாளிகை: வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

நெல்லை: ‘தமிழ்நாட்டில் கவர்னரை பின்னால் இருந்து ஒன்றிய அரசு இயக்குகிறது. சங்பரிவார் வட்டாரமாக கவர்னர் மாளிகை மாறி வருகிறது’ என்று வைகோ தெரிவித்து உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் அக்கிரமமான செயல் ஆகும். கவர்னர் சட்டமன்றத்திற்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்பது கண்டிக்கதக்கது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இணைந்து குடியரசுத்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து களம்காண தயாராகும் அதிமுக, பாஜக: இரட்டை இலையை முடக்க ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பாணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் எடப்பாடி அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியை காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல்…

மாநில அரசு தயாரிப்பதை கவர்னர் படிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் பாஜ சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அளித்த பேட்டி: கவர்னரின் உரை என்பது, அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு மாநில அரசாங்கம் தயாரித்து கொடுப்பதை படிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், கவர்னரை தங்கள் சித்தாந்தத்தை புகழ்பாட கூடிய ஒருவராக ஆளக்கூடிய  அரசாங்கம் நினைக்க முடியாது. அரசின் திட்டங்களையோ, செயல்களையோ தான் கவர்னர் உரையில் குறிப்பிடுவார். இதுதான் பாரம்பரியமாக இருக்கக்கூடிய மரபு. ஆனால்  தங்கள் சித்தாந்தங்களுக்கு எதிராக அவர் வெளியில் பேசுகிறார்…

யார் ஆட்சியில் நீட் தேர்வு வந்தது? திமுக-அதிமுக காரசார விவாதம்

தமிழ்நாட்டில் யார் ஆட்சியின் போது நீட் தேர்வு நுழைந்தது என்பது குறித்து பேரவையில் நேற்று திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேப்பனஹள்ளி தொகுதி உறுப்பினர் கே.பி.முனுசாமி (அதிமுக) விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:  கவர்னரின் அவையில் பேசி முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்திருக்கும் நேரத்தில், சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று கருதுகிறேன்.…

நொய்யல் ஆற்றை மீட்க அன்புமணி நடைபயணம்

கோவை: பசுமை தாயகம் அமைப்பு சார்பில் ‘நொய்யல் ஆற்றை மீட்போம்’ என்ற தலைப்பில் கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் ‘நொய்யல் மீளட்டும், கொங்கு செழிக்கட்டும்’ என்ற லோகோவை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: காவிரி ஆறு 5 கோடி மக்களுக்கு நீர் ஆதாரத்தை கொடுக்கிறது. நொய்யல் ஆறு, பவானி ஆறு  போன்றவை இயற்கை கொடுத்த வளம். 40 ஆண்டுகளுக்கும்…

கவர்னரின் செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 19ல் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் பரப்புரை இயக்கத்தின் மேலிட பொறுப்பாளர் கொடிக்குனில் சுரேஷ், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழ்நாடு எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், பிரின்ஸ், அசோகன், பழனி நாடார், ஊட்டி…

ஆளுநர் உரை குறித்து எடப்பாடி கருத்து

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு துவக்கத்தில் அரசு, ஆளுநர் உரையை தயாரித்து ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பப்படும். இதில் எது இடம்பெற்றது, இடம் பெறவில்லை என்பது எங்களுக்கு தெரியாது. எதனை ஆளுநர் அனுமதித்தார். அனுமதிக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியாது. அவையில் அவர் பேசுவது குறித்து நாங்கள் என்ன சொல்ல முடியும். நாங்கள் அவர் பேசுவதை கேட்கத்தான் வந்துள்ளோம். Source link

தமிழக அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆவேச பேட்டி

சென்னை: தமிழக அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் அவர்கள் அளித்த பேட்டி: செல்வபெருந்தகை (காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர்): ஆன்லைன் ரம்மிக்கு எதிராக  தமிழக  பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் ஒப்புதல் அளிக்காததால்…

1 37 38 39 40 41 161