Browsing: அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் யாரை வேட்பாளராக இறக்குவது என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தது. தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று  கூறப்பட்டது. இதற்கு எடப்பாடியும் ஓகே தெரிவித்திருந்தார். ஆனால்  தொகுதியின் கள நிலவரம் அறிந்த ராமலிங்கம் மெல்ல ஜகா வாங்கிக்கொண்டார். இதன்பிறகு முன்னாள் எம்எல்ஏ தென்னரசு,…

சொல்லிட்டாங்க…

* ஏழைகள், தலித்துகள் கனவு காணவும், ஆசைகளை நிறைவேற்றவும் ஒன்றிய அரசு தைரியத்தை அளித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு* ஊழலை ஒழித்துவிட்டதாக அரசு கூறுகிறது, ஆனால் ஒரு நபர் எப்படி வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடியை ஏமாற்ற முடியும். காங்கிரஸ் தலைவர் கார்கே* ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும். அதன் பிறகு எனது முகாம் அலுவலகத்தை அங்கே மாற்றி சென்று விடுவேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி* விலைவாசி கட்டுப்படுத்துதல், மத நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்,…

அதிமுக காத்திருப்பது பற்றி கவலை இல்லை: நாராயணன் திருப்பதி

சென்னை: பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தலால் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக முடிவு எடுப்பதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது.   Source link

இடைத்தேர்தலில் போட்டியா? அதிமுகவுக்கு ஆதரவா?.. முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் பாஜகவின் ஆதரவை கோரியுள்ளன. அதிமுகவின் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகாததால் முடிவு எடுக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது. இரட்டை இலையை வைத்திருக்கும் அதிமுக அணியை மட்டுமே ஆதரிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக போட்டியிடும் என்று கூறிய நிலையிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்று இன்றைய கூட்டத்திலும் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகவே இடைத்தேர்தலில்…

முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் இயங்கும் முக்கியமான இயக்குநரகங்களான மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் ஆகியவற்றிற்கான தலைமைப் பதவிகள் எல்லாம் கூடுதல் பொறுப்பில் உள்ளது. முதல்வர், உடனடியாக கவனம் செலுத்தி, மருத்துவத் துறைகளின் இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்பவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியினை நிரப்பவும், காலியாகவுள்ள மருத்துவர்கள் மற்றும்…

மதவெறி பித்து பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு அநாகரிக அரசியலில் ஈடுபடுவதா? பாஜ தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்

சென்னை: மதவெறிப் பித்துப் பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக எச்சரித்துள்ளது. இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று…

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முதன்முறையாக கமல் பங்கேற்பு: பிப். 2வது வாரம் ஈரோட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

* தலைவராக பொறுப்பேற்ற பின்பு பிரசாரத்துக்கு வரும் மல்லிகார்ஜூன கார்கே* கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ்.இளங்கோவனை எதிர்த்து அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. டிடிவி.தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகியவையும்…

வீடியோவை எடிட் செய்ததாக நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை பேட்டி

கோவை: எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட வீடியோ எடிட் செய்யப்படவில்லை என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். கோயிலை இடிப்பதை பெருமையாக பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒரிஜினல் வீடியோவை எ.வ.வேலு கூறும் இடத்தில் தருகிறோம். அந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைக்க உள்ளோம். வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார். ஈரோடு கிழக்கில் பண விநியோகம் தொடங்கி விட்டது. இது பாஜகவின் தேர்தல்…

இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது எனவும் கூறினார். Source link

தி. மலை வடக்கு மாவட்ட விசிக செயலர் பகலவன் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட்

தி. மலை: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலர் பகலவன் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பகலவனின் செயல் குறித்து விசாரிக்க மாநில அளவில் விசாரணை குழு நியமிக்கப்படும். மக்கள், கட்சி நலனுக்காக கட்டுப்பாடுகளை மீறாமல் செயல்பட வேண்டியது முக்கியமானது என திருமாவளவன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். Source link

1 28 29 30 31 32 161